Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரை புள்ளி தூரத்தில் விஸ்வநாதன் ஆனந்த்தின் உலக சாம்பியன் பட்டம்!

Kramnik and Anand
பான்: விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை எட்டும் நிலையில் உள்ளார். 0.5 புள்ளிகள் வித்தியாசத்தில் அவரது பட்டம் தொக்கி நிற்கிறது.

உலக செஸ் சாம்பியன் போட்டி ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்று வருகிறது.

12 சுற்றுக்களை கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக்குடன் மோதி வருகிறார்.

முதலில் 6.5 புள்ளி பெறுபவரே சாம்பியன் பட்டம் பெறுவார் என்ற நிலையில் நேற்று 10வது சுற்று ஆட்டம் நடந்தது.

போட்டியில் டிரா செய்தாலே ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் பெறுவார் என்ற நிலை இருந்தது. ஆனால், 29வது காய் நகர்த்தலில் ஆனந்தை தோல்வி அடையச் செய்தார் கிராம்னிக்.

ஆனாலும் 10 சுற்றுகள் முடிவில் ஆனந்த் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் முன்னணியில் உள்ளார். இன்னும் 0.5 புள்ளி பெற்றால் உலக சாம்பியன் பட்டத்தை அவர் மீண்டும் பெறுவார்.

ஆட்டத்தில் இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன. இதில் ஏதாவது ஒரு சுற்றில் டிரா செய்தாலே ஆனந்த் பட்டம் பெற்றுவிட முடியும். 2 சுற்றிலும் ஆனந்த் தோற்றால் 6-6 என்ற சமநிலை ஏற்படும்.
இதனால் டை பிரேக்கர் மூலம் தான் ஆட்டம் முடிவுக்கு வரும்.

இன்று ஓய்வு நாள் என்பதால் நாளை 11வது சுற்று ஆட்டம் நடக்கவுள்ளது.

இந்தப் போட்டியில் ஆனந்த் வென்றால் 3வது முறையாக அவர் உலக சாம்பியன் பட்டத்தை பெறுவார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+