ஆசிய தூப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் - அபினவ் பிந்த்ராவுக்கு தங்கப்பதக்கம்

கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய தூப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா கலந்து கொண்டார்.
10 மீ்ட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் தகுதி சுற்றில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா (597 புள்ளிகள்), சீன வீரர்களான குயினன் ஷூ மற்றும் தாவோ வாங்(595 புள்ளிகள்) உள்ளிட்டவர்களை விட அபினவ் பிந்த்ரா 2 புள்ளிகள் அதிகமாக பெற்றார். இறுதிச்சுற்றில் மிக தெளிவான சுட்ட அபினவ் பிந்த்ரா 104.1 புள்ளிகளை எடுத்து தங்கப்பதக்கம் வென்றார். அவருடன் மோதிய சீனா வீரர்கள் இறுதிச் சுற்றில் 103.2 புள்ளிகள் எடுத்து பின்தங்கினர்.
Story first published: Saturday, January 14, 2012, 16:43 [IST]
Other articles published on Jan 14, 2012


Click it and Unblock the Notifications