For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வெல்ல நியூமராலஜி கை கொடுக்குமா?

By
Abhinav Bindra
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பி்ந்த்ரா, இந்த முறை பதக்கம் பெற வாய்ப்புள்ளதாக நியூமராலஜி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள நபர்களில், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவும் ஒருவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இன்று நடைபெற உள்ள 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ராவும், மற்றொரு இந்தியரான ககன் நராங்கும் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களின் பிறந்த தேதி, பங்கேற்கும் நாள் ஆகியவற்றை கூட்டி கழித்து பார்த்தால், ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ராவின் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, நியூமராலஜி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூமராலஜி நிபுணர்களின் கணிப்பு:

அபினவ் பிந்த்ராவின் கடந்த 1982ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிறந்தார். சூரியன் மற்றும் வியாழன் கிரகங்களின் பார்வையில் அபினவ் பிந்த்ரா உள்ளார். நியூமராலஜி படி, சூரியனுக்கு ஒன்றும், வியாழன் கிரகத்திற்கு 3வது எண்ணும் வழங்கப்படுகிறது.

இன்றைய தேதியில் (ஜூலை 30ம் தேதி) 3 என்ற எண் வருகிறது. மேலும் இந்த ஆண்டின் (2012) கூட்டு தொகையின் மூலம் 5 என்ற எண் கிடைக்கிறது. இது அபினவ் பிந்த்ராவிற்கு சாதகமாக அமையலாம்.

அபினவ் பிந்த்ராவின் பிறந்த தேதியின் கூட்டு தொகை (28) மூலம் 1 என்ற எண் கிடைக்கிறது. மேலும் 2008 என்ற ஆண்டின் கூட்டு தொகையின் மூலமும் 1 என்ற எண் கிடைக்கிறது. இதனால் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல இந்த ஆண்டும் அபினவ் பிந்த்ரா மீண்டும் தங்க பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

இது குறித்து பெங்களூரை சேர்ந்த நியூமராலஜி நிபுணர் வரூண் அதித்யா கூறியதாவது,

நட்சத்திரங்கள் அபினவ் பிந்த்ராவிற்கு சாதகமாக உள்ளதால், அவர் இந்த முறை தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் ககன் நராங் பொறுத்த வரை நட்சத்திரங்கள் நடுநிலையில் உள்ளன. இதனால் அபினவ் பிந்த்ராவை போல பதக்க வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக இல்லை.

வெள்ளி மற்றும் மெர்குரி கிரகங்களின் பார்வையில் ககன் உள்ளார். இதில் மெர்குரி அவருக்கு சாதகமாக இருந்தாலும், வெள்ளி கிரகம் சாதகமாக இல்லை. இதனால் ககன் நராங் இன்று பதக்கம் வெல்லவதை கணிக்க முடியாது என்றார்.

Story first published: Monday, July 30, 2012, 13:35 [IST]
Other articles published on Jul 30, 2012
English summary
As India's most anticipated medal prospects Abhinav Bindra and Gagan Narang take part in 10M Air rifle event on Day four of the prestigious sporting event, London Olympics, expectations are soaring high on the two shooters as numerology experts suggest that India might win a medal today at Olympics.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+