For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றது எனக்குக் கிடைத்த ஆசிர்வாதம்-சச்சின்

By Siva
Sachin
மும்பை: 2011ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்தற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சர்வதசே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் பிசிசசிஐக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

2015ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பையை வெல்ல விரைவில் அதற்குத் தேவையான நடிவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டவனாக உள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சச்சின் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1989ம் ஆண்டு முதன்முதலாக சர்வதசே ஒரு நாள் போட்டியில் விளையாடத் துவங்கினார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 23, 2012, 12:10 [IST]
Other articles published on Dec 23, 2012
English summary
Sachin Tendulkar felt blessed to be part of the world cup winning team. He dreamt for a long time to be a part of the world cup winning team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X