For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரையிறுதியில் நுழைந்த சென்னை-வெளியேறிய ராஜஸ்தான்

By Staff

டர்பன்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் அரையிறுதிக்கு பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை கோட்டைவிட்டது.

ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர் கொண்டது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக பெய்லே, பார்த்திவ் படேல் வந்தனர். ஹைடனுக்கு இந்த போட்டியிலும் ஓய்வு கொடுக்கப்பட்டது. பெய்லே 15, பார்த்திவ் 32 ரன்கள் எடுத்து, அவுட்டானார்கள். அடுத்து வந்த ரெய்னா 20 ரன்களுக்கு வெளியேறினார்.

பத்ரிநாத் 4, கேப்டன் டோணி 2 என அடுத்து வந்த வீரர்கள் மோசமாக பேட் செய்தனர். வருவதும் போவதுமாக இருந்தனர். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 117 ரன்கள் என்ற எளிய இலக்கை செய்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், சென்னை வீரர்கள் பரவாயில்லை என சொல்லும் அளவுக்கு விளையாடினர்.

போமர்ஸ்பேச் 26, இர்பான் பதான் 14 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்து, 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து சென்னை அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

வெளியேறியது ராஜஸ்தான்...

முன்னதாக நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. நமன் ஓஜா 22, வார்ன் 18, ரவிந்திர ஜடோஜா 14 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து பேட் செய்த கொல்கத்தா துவக்கத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. மெக்கலம் (9), கங்குலி (0), ஹாட்ஜ் (6) விரைவில் அவுட்டானார்கள். கடைசிகட்டத்தில் சிறப்பாக விளையாடிய லட்சுமி ரத்தன் சுக்லா 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

கொல்கத்தா அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அரையிறுதி வாய்ப்ப பறிகொடுத்தது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+