Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப அட்டகாசமான ஆட்டம் பார்த்தி... டாம் மூடி புகழாரம்

மொஹாலி: பார்த்திவ் படேலின் ஆட்டம் அபாரம்.. ரொம்ப ரொம்ப முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பார்த்திவ் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பார்த்திவ் படேலின் அபாரமான அரை சதம் மற்றும் டேரன் சமியின் பிரமாதமான பவுலிங் காரணமாக ஹைதராபாத் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பார்த்திவ் படேலின் பொறுப்பான ஆட்டத்தைப் பாராட்டியுள்ளார் பயிற்சியாளர் மூடி.

பிளே ஆப் வாய்ப்பு பிரகாசம்

பிளே ஆப் வாய்ப்பு பிரகாசம்

இந்த வெற்றி அணியின் பிளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. நெட் ரன் ரேட் சற்றுக் கவலைக்குரியதாக இரு்ந்தாலும் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.

பிரமாதம் பார்த்திவ்

பிரமாதம் பார்த்திவ்

பார்த்திவ் படேலின் ஆட்டம் இன்று பரவசப்படுத்தியது. என்ன ஒரு பக்குவம், ஒரு முதிர்ச்சி.... ஹைட்ஸ் ஆப் பார்த்திவ். மிக பொறுப்பாக ஆடினார் பார்த்திவ். எங்களுக்கு வெற்றி தேடித் தந்தது பார்த்திவின் ஆட்டம்தான். ஒரு கட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். ஆனால் பார்த்திவ் அதை உயர்த்தி விட்டார் என்றார் மூடி.

தட்டுத் தடுமாறி 150க்கு முன்னேறிய ஹைதராபாத்

தட்டுத் தடுமாறி 150க்கு முன்னேறிய ஹைதராபாத்

முன்னதாக முதலில் பேட் செய்த ஹைதராபாத் மிகவும் தடுமாறியது. விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் 100 ரன்களாவது எடுக்குமா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் பார்த்தி்வ் படேலின் அபாரமான ஆட்டம் மற்றும் திசரா பெரரைராவின் கடைசி நேர அதிரடி காரணமாக அந்த அணி 150 ரன்களைக் குவித்தது.

பவுலர்களும் பிரமாதம்

பவுலர்களும் பிரமாதம்

பவுலர்கள் குறித்து மூடி கூறுகையில், மொஹாலி பிட்ச்சை மிகச் சரியாக பயன்படுத்தினர் எங்களது பந்து வீச்சாளர்கள் என்றார்.

இன்னும் டாப் 4க்குள் இல்லையே...

இன்னும் டாப் 4க்குள் இல்லையே...

இந்த வெற்றியால் டாப் 4 இடங்களுக்குள் முன்னேற முடியவில்லையே ஹைதராபாத் என்றுகேட்டபோது மூடி கூறுகையில், நாங்கள் நெட் ரன் ரேட்டைப் பார்ப்பதில்லை. வெற்றியை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். நிச்சயம் நாங்கள் அடுத்த போட்டிகளில் வெல்வோம், பிளே ஆபுக்குள் நுழைவோம் என்றார் உறுதிபட.

Story first published: Sunday, May 12, 2013, 12:32 [IST]
Other articles published on May 12, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+