Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊர் ஊராய் உதை வாங்கும் இங்கிலாந்து-பாய்காட்

Andrew Strauss
லண்டன்: தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இங்கிலாந்து அணி, ஊர் ஊராய் சென்று உதை வாங்கி வருவவதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஜெப் பாய்காட் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடந்தது. இதன் இரண்டாவது இன்னிங்சில் படுமட்டமாக விளையாடிய இங்கிலாந்து அணி 51 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

இதற்கு முன்னதாக் இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெறுங்கையுடன் திரும்பியது. தற்போது வெஸ்ட் இண்டீசில் முதல் போட்டியில் மோசமாக தோற்றதை அடுத்து கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந் நிலையில் இங்கிலாந்து அணி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதை வாங்குகிறது என்கிறார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஜெப் பாய்காட். இது குறித்து அவர் கூறுகையில்,

இங்கிலாந்து அணி மோசமாக விளையாடி வருகிறது. பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. நாங்கள் விளையாடிய காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி உதை வாங்குகிறது.

எங்கள் காலத்தில் வீரர்களுடன் மானேஜர் ஒருவரும் கூட இரண்டு ஊழியர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால், தற்போது 15 வீரர்களுடன் 13 ஊழியர்கள் செல்கின்றனர். இவர்கள் வீரர்களிடையே ஊக்க சக்தியை வளர்க்க மறந்துவிட்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதுகெலும்பில்லாத அணியாக இருக்கிறது. வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களிடம் உள்ள குறைகளை களையவில்லை.

பனேசர் ஆறு பந்தையும் ஒரே போல் வீசுகிறார். அலிஸ்டர் குக் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை சரியாக எதிர்கொள்ள பழகவில்லை. பெல் நெருக்கடிக்கு எளிதாக பணிந்துவிடுகிறார். பீட்டர்சன், பிளின்டாப் தவிர்த்து மற்றவர்கள் கிரிக்கெட் விளையாட தகுதியற்றவர்கள் என்றார் பாய்காட்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+