Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்களே சொல்லுங்க...ராபின் வான் பெர்சி 40 மில்லியன் பவுண்ட் சம்பளம் பெற தகுதியானவரா?

Robin van Persie
லண்டன்: இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆடி வரும் நெதர்லாந்தை சேர்ந்த வீரரான ராபின் வான் பெர்சி கடந்த ஆண்டு முதல் அடுத்தடுத்து காயமடைந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒப்பந்த தொகையாக அறிவிக்கப்பட்டுள்ள 40 மில்லியன் பவுண்ட் பெற அவர் தகுதியானவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆடி வருபவர் ராபின் வான் பெர்சி(29). சிறந்த தடுப்பாட்ட வீரரான இவர், நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர். ரிவல்ஸ் ஆர்சினல் அணிக்காக 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ராபின், இன்னும் 1 ஆண்டு ஒப்பந்த காலம் மீதமுள்ள நிலையில், தற்போது மான்செஸ்டர் அணிக்காக ஆட சம்மதித்து உள்ளார்.

கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய ராபின் மொத்தம் 37 கோல்களை அடித்தார். ஆனால் அவர் பலமுறை காயமடைந்தார். இதனால் ராபினை அணியில் சேர்க்க 40 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்ய மான்செஸ்டர் அணி தயாராக உள்ளது. பொருளாதாரத்தில் திணறி வரும் மான்செஸ்டர் அணி, 15 மில்லியன் பவுண்ட் முதல் தவணையாகவும், மீதமுள்ள தொகை அவரது ஆட்டத்தை பொறுத்தும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆர்சினல் அணி நிர்வாகம், நட்சத்திர வீரரான ராபினை மான்செஸ்டர் அணிக்கு அளித்து நல்ல வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த சீசனில் பல முறை காயமடைந்துள்ள ராபின் 40 மில்லியன் பவுண்ட் வாங்கப்பட்டதற்கு, அவர் தகுதியானவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மான்சிஸ்டர் யூனைட் அணியில் ஆடிய டிமிடர் பெர்பாடோவ் என்ற வீரருக்கு 30.5 மில்லியன் பவுண்ட் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 21, 2012, 16:59 [IST]
Other articles published on Aug 21, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+