Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெயரைக் கெடுத்து விட்டார், ஸ்ரீசாந்த்தை கடுமையாக தண்டியுங்கள்... கேரளாவில் கொந்தளிப்பு

கொச்சி: கேரளாவின் பெயரைக் கெடுத்து விட்டார் ஸ்ரீசாந்த். அவரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேரள கிரிக்கெட் ரசிகர்கள் குமுறலுடன் கூறியுள்ளனர்.

கேரளாவிலிருந்து தேசிய அளவில் பிரபலமான முதல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தான். இதனால் கேரள மக்கள் அவரைக் கொண்டாடி வந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. ஸ்ரீசாந்த்தால் கேரளாவின் பெயர் கெட்டுப் போய் விட்டதாக அவரது மலையாள ரசிகர்கள் குமுறுகின்றனர்.

ஸ்ரீசாந்த்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் உரத்த குரலில் கோரிக்கை வைத்துள்ளனர்.

மலையாளிகளுக்கு அவமானம்

மலையாளிகளுக்கு அவமானம்

அமல் என்ற ரசிகர் கூறுகையில், ஸ்ரீசாந்த்தின் தீவிர ரசிகன் நான். அவர் மிகத் திறமையான வீரர். ஆனால் இன்று கேரளாவுக்கும், மலையாளிகளுக்கும் பெரும் அவமானத்தைக் கொடுத்து விட்டார்.

2 உலகக் கோப்பைகளில் விளையாடிய மலையாளி

2 உலகக் கோப்பைகளில் விளையாடிய மலையாளி

டுவென்டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை என இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய முதல் கேரள வீரர் அவர்தான். ஆனால் இன்று அவரை நினைத்து அவமானத்தில் புழுங்குகிறோம் என்றார் அமல்.

ஏமாற்றி விட்டாயே ஸ்ரீசாந்த்

ஏமாற்றி விட்டாயே ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த்துடன் கிரிக்கெட் விளையாடியவரான சக வீரர் தியாகராஜன் என்பவர் கூறுகையி்ல், என்னை ஏமாற்றி விட்டார் ஸ்ரீசாந்த். இப்போது என்னால் ஐபிஎல் போட்டிகளைக் காண முடியவில்லை. எல்லா ரசிகர்களின் மன நிலையும் இதுதான். அனைவருமே ஏமாற்றப்பட்டது போல உணர்கிறார்கள். ஸ்ரீசாந்த் தவறு செய்திருந்தால் நிச்சயம் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

கேரளா முழுவதும் எதிர்ப்பு

கேரளா முழுவதும் எதிர்ப்பு

வழக்கமாக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு சிக்கல் என்றால் அத்தனை கேரளாக்காரர்களும் ஆதரவாக திரண்டு வருவார்கள். ஆனால் ஸ்ரீசாந்த் விஷயத்தி்ல இது மாறிப் போயுள்ளது. அத்தனை பேரும் ஸ்ரீசாந்த்தை திட்டிக் கொண்டுள்ளனராம்.

Story first published: Monday, May 20, 2013, 14:37 [IST]
Other articles published on May 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+