Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளைக்கு ராத்திரியாச்சும் நாம ஜெயிச்சுருவோமா குமாரு....??

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் நாளை இந்தியா 2வது முறையாக மோதவுள்ளது. இதில் வென்றால்தான் இறுதிப் போட்டியைப் பற்றி கனவாவது காண முடியும் என்பதால் இந்திய ரசிகர்கள் டென்ஷனாக உள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவுகளில் 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கையும் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் நாளை தனது 2வது சுற்றுப் போட்டிகளை ஆரம்பிக்கிறது இந்தியா.

முதல் போட்டியில் பரிதாபத் தோல்வி

முதல் போட்டியில் பரிதாபத் தோல்வி

முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாகத் தோல்வியுற்றது.

2வது போட்டியில் மோசமான தோல்வி

2வது போட்டியில் மோசமான தோல்வி

2வது போட்டியில் இலங்கை அணியிடம் மோசமான தோல்வியைச் சந்தித்தது. 161 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை.

நாளை 3வது போட்டி

நாளை 3வது போட்டி

இந்தநிலையில் வெள்ளிக்கிழமையன்று 3வது போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சந்திக்கிறது இந்தியா.

நாளை ஜெயித்தாக வேண்டும்

நாளை ஜெயித்தாக வேண்டும்

இந்தியாவுக்கு நாளைய போட்டியுடன் சேர்த்து மொத்தம் 2 போட்டிகள்தான் இன்னும் உள்ளன. எனவே நாளைய போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குப் போவது சாத்தியமாகும்.

தோற்றால் அவுட்...

தோற்றால் அவுட்...

ஒரு வேளை நாளைய போட்டியில் இந்தியா தோற்றால் இறுதிப் போட்டிக்கு போக முடியாது. வெளியேற வேண்டியதுதான்.

தெம்புடன் மேற்கு இந்தியத் தீவுகள்

தெம்புடன் மேற்கு இந்தியத் தீவுகள்

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. நாளைய போட்டியில் வென்றால் அது இறுதிப் போட்டிக்குப் போய் விடும்.

Story first published: Thursday, July 4, 2013, 15:21 [IST]
Other articles published on Jul 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+