சூப்பர்-8: வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது இந்தியா

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. நேற்று நடந்த சூப்பர்-8 போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது.
துவக்க வீரர்களாக வந்த கம்பீர் 14, ரோகித் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் 5 ரன்களுக்கு அவுட்டாக இந்தியா திணற துவங்கியது.
இந்நிலையில் களமிறங்கிய கேப்டன் டோணி, யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய யுவராஜ் ஒரு முனையில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார்.
மறுமுனையில் டோணி படுமந்தமாக பேட் செய்தார். டுவென்டி-20 போட்டி என்பதை மறந்துவிட்டாரோ... என்னவோ... பந்துகளை வரிசையாக வீணடித்தார். 23 பந்தில் 11 ரன்கள் எடு்தது அவுட்டானார்.
அடுத்து வந்த யூசுப் பதான் ஒத்துழைப்பு கொடுக்க யுவராஜ் அரைசதம் கடந்தார். யுவராஜ் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 43 பந்தில் 67 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 31 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் பேட் செய்த ஹர்பஜன் 4 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு பிளட்சர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் கெய்ல் 22 ரன்கள் எடு்த்தனர். சிம்மன்ஸ் 44 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பிரேவோ 66, சந்தர்பால் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வென்றது.
இங்கிலாந்துடன் நாளை மோதல்...
இதையடுத்து இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணி நாளை நடக்கும் போட்டியில் இங்கிலாந்தையும், வரும் 16ம் தேதி தென் ஆப்ரிக்காவையும் எதிர்கொள்கிறது.
பாகிஸ்தானும் தோற்றது...
முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications