இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இன்று 2வது போட்டி

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. கடந்த 26ம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடக்கிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 339 ரன்கள் குவித்த போதும் வெஸ்ட் இண்டீஸ் கடும் சவால் கொடுத்தது. 319 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோற்றது. கொஞ்சம் அசத்திருந்தாலும் வெற்றியை தட்டி பறித்திருக்கும். இதனால் இன்றைய போட்டியில் இந்திய வீர்ரகள் முழு விழிப்புடன் விளையாட வேண்டியது அவசியம்.
முதல் போட்டியில் யுவராஜின் விளாசல் ஆட்டம் இன்னும் ரசிகர்களின் கண்களை விட்டு அகன்று இருக்காது. இவரது அதிரடி தொடர்ந்தால் இன்றும் இந்திய அணி 300 ரன்களை எளிதாக தாண்டலாம்.
ஷேவாக் இல்லாத நிலையில் அவரது இடத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டு அசத்தினார். இன்றும் அவர், கம்பீருடன் இணைந்து அணிக்கு சூப்பர் துவக்கம் தருவார் என எதிர்பார்க்கலாம்.
பந்துவீச்சில் நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய ஆசிஷ் நெஹ்ரா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். மற்ற பவுலர்கள் சொதப்பி விட்டனர். ஒட்டுமொத்தமாக 29 ரன்களை உதிரிகளாக வாரி வழங்கினர். இது போன்ற தவறுகளை இந்திய பவுலர்கள் விரைவில் திருத்தி கொண்டால் இரண்டாவது போட்டியில் வெற்றி நிச்சயம்.
இன்றைய போட்டி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெய்ல் கூறுகையில்,
340 ரன்களை சேஸ் செய்த எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. ஆனால், அடுத்து வந்த வீரர்கள் அதை தக்கவைத்து கொள்ள தவறி விட்டனர். மற்றபடி வீரர்கள் அனைவரும் சிறப்பாக பேட் செய்தனர். சந்தர்பாலின் ஆட்டம் சூப்பராக இருந்தது. இரண்டாவது போட்டியில் கடும் சவால் கொடுப்போம் என்றார் கெய்ல்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications