இங்கிலாந்துக்குப் போனவங்களே அப்படியே வெஸ்ட் இண்டீஸுக்கும் போறாங்கப்பா...!
மும்பை: இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியே, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வாளர் குழு நேற்று மும்பையில் அறிவித்தது. சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அப்படியே மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் பயணமாகிறார்கள்.
ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 11 வரை இந்த அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கும்.

சாம்பியன்ஸ் கலக்கல்
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலக்கி வரும் ஒரே அணி இந்தியா மட்டுமே. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அரை இறுதிக்குள்ளும் நுழைந்துள்ளது.

5 நாள் கழித்து மேற்கு இந்தியத் தீவுகளில்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த 5 நாட்கள் கழித்து மேற்கு இந்தியத் தீவுகள் முத்தரப்பு தொடர் தொடங்குகிறது.

முதல் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளுடன்
இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையே முதல் போட்டி ஜூன் 30ம் தேதி நடைபெறும்.

ஆளுக்கு 2 வாட்டி
இந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் மூன்று அணிகளும் தலா 2 முறை மோதிக் கொள்ளும்.

ஜூலை 11ம் தேதி இறுதிப் போட்டி
டிரினிடாடில் ஜூலை 11ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

மூன்றாவது அணி இலங்கை
இந்தத் தொடரில் பங்கேற்கும் மூன்றாவது அணி இலங்கை ஆகும்.

கேப்டன் டோணி
அணி கேப்டனாக டோணி செயல்படுவார். அவர் தவிர மற்ற வீரர்கள் - ஷிகர் தவான், முரளி விஜய், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, திணேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், இர்பான் பதான், அமீத் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, வினய் குமார்.


Click it and Unblock the Notifications