காயம் காரணமாக ஐபிஎல் 4 போட்டிகளில் புஜாரா விளையாடுவது சந்தேகம்!

இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் புஜாராவும் ஒருவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இரட்டை சதம் அடித்தவர். அவருக்கு தற்போது வலது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள புஜாரா, முதல் 4 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸின் பயிற்சி முகாம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப் பயிற்சி முகாமில் ஜாஹிர் கான், ஜயதேவ் ஆகியோர் இன்று இணையக் கூடும். இலங்கையின் முத்தையா முரளிதரன் மார்ச் 28-ந் தேதி இணைந்து கொள்கிறார். ஏப்ரல் 1-ந் தேதி கிறிஸ் கெயில் இணைந்து கொள்கிறார்.
Story first published: Tuesday, March 26, 2013, 18:36 [IST]
Other articles published on Mar 26, 2013


Click it and Unblock the Notifications