காயம்.... மேற்கிந்திய தீவு போட்டிகளில் தில்சான் விளையாடவில்லை!
கார்டிஃப்: மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் தொடக்க வீரரான திலகரத்னே தில்சான் காயம் காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அரை இறுதியில் இந்தியாவுடனான ஆட்டத்தில் தில்சானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 4 முதல் 6 வார காலத்துக்கு ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மேற்கிந்திய தீவுகளில் வரும் 28-ந் தேதி தொடங்கும் இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் தில்சான் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைத்து ஆடக் கூடிய தொடக்க வீரரான தில்சான் இடம்பெறாதது அந்த அணிக்கு இழப்பாகும்.
Story first published: Saturday, June 22, 2013, 14:06 [IST]
Other articles published on Jun 22, 2013


Click it and Unblock the Notifications