தலா ரூ. 7.6 கோடிக்கு ஏலம் போன பீட்டர்சன், பிளின்டாப்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) சார்பில் டுவென்டி-20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வீரர்களை ஐபிஎல்லில் உள்ள எட்டு அணிகளும் ஏலம் மூலம் தேர்வு செய்கின்றன.
கடந்தாண்டு நடந்த முதல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ். டோணியை 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இவர் தான் ஏலத்தில் அதிகம் விலை போனவராவார்.
கோவா தலைநகர் பனாஜியில் இன்று 2வது ஏலம் நடந்தது.
இதில் இங்கிலாந்து வீரர் பிளின்டாப், பீட்டர்சன் தலா 7.6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். பிளின்டாபை சென்னை சூப்பர் கிங்சும், பீட்டர்சன்னை பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் வாங்கியுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமை இவர்களுக்குக் கிடைத்துள்ளது,.
ஆஸ்திரேலிய பவுலர் ஷான் டெய்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.8 கோடி ரூபாய்க்கும், தென் ஆப்ரிக்காவின் பால் டுமினி மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.7 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் பால் கோலிங்வுட் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ. 1.3 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.
வெஸ்ட் இண்டீசின் பிடல் எட்வர்ட்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ்), ஜெரோம் டெய்லர் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா (டெல்லி டேர்டெவில்ஸ்), ரவி போபரா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), இலங்கையின் திலன் துஷாரா (சென்னை சூப்பர் கிங்ஸ்), வங்கதேசத்தின் அஷ்ரபுல் (மும்பை இந்தியன்ஸ்), மோர்டசா (கோல்கட்டா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்ட வீரர்களும் ஏலம் போனார்கள்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டுவர்ட் கிளார்க், பிராட் ஹாடின், தென் ஆப்ரிக்காவின் பிரின்ஸ், ஆன்ட்ரு நெல், வெஸ்ட் இண்டீசின் சர்வான், இலங்கையின் கபுகேதரா, குலசேகரா உள்ளிட்ட சில வீரர்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications