For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்-பாண்டே

By Staff

செஞ்சுரியன்: கடைசி லீக் போட்டியில் சதம் கடந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பெற்று தந்த மணிஷ் பாண்டே தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்சை எதிர்கொண்டது.

அரையிறுதிக்கு நுழைய இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு துவக்க வீரர் மணிஷ் பாண்டே சதம் கடந்து அணிக்கு சூப்பர் வெற்றியையும், அரையிறுதி வாய்ப்பையும் தேடி தந்தார். மேலும், இந்த சதத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் சதம் கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

114 ரன்கள் எடுத்த அவர் இத்தொடரில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதையடுத்து அவருக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பாண்டே கூறுகையில்,

நான் தேசிய அளவில் பெரிய கிரிக்கெட் வீரராக வரவில்லை என்றால் ராணுவத்தில் சேர திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது எனது திட்டத்தில் லேசான மாற்றம் வந்துள்ளது. எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கேப்டன் அனில் கும்ளே, பயிற்சியாளர் ரெ ஜென்னி்ங்ஸ் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். நெருக்கடியான போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் தான் எனக்கு சொல்லி கொடுத்தனர்.

இந்த போட்டிக்கு முன்னதாக நடந்த அணி கூட்டத்தி்ல் கும்ளே நான் தான் ஆட்டத்தை துவக்கப் போவதாக என்னிடம் கூறினார். என் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருப்பாதகவும், என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறும் கூறினார். திறமைக்கேற்ப விளையாடினாலே நன்றாக ஸ்கோர் செய்யலாம் என்றார்.

ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக ஒத்துழைத்தது. இதனால் நான் செய்த சிறிய தவறுகள் எனக்கு பெரிய சிக்கலை தரவில்லை. சதம் கடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் 87 ரன்கள் எடுத்திருந்த போது சதம் அடிக்கலாம் என்ற ஆசை எனக்கு தோன்றியது. தற்போதைய ஐபிஎல் தொடரில் சதம் கடந்த இரண்டாவது வீரர் என்பது உற்சாகம் தருகிறது.

சச்சின் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது அவரை போல் விளையாட வேண்டும் என நினைப்பேன். சச்சின் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார் மணிஷ் பாண்டே.

Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+