Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்குகிறார்கள்- சொல்கிறார் ரணதுங்கா

Ranatunga
டெல்லி: தமிழக அரசியல்வாதிகள், அவர்களது மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள் என்று பேசியுள்ளார் சிங்கள முன்னாள் கிரிக்கெட் வீரரான அர்ஜூன ரணதுங்கா.

இதுகுறித்து என்டிடிவியின் பர்கா தத்துக்கு ரணதுங்கா அளித்த பேட்டியில், அரசியலும், விளையாட்டும் தனித் தனியாக வைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. அரசியலும், விளையாட்டும் பிரிக்க முடியாததாகி விட்டது. கடந்த பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கும்போதெல்லாம் இதுபோல நடப்பது வாடிக்கையாகி விட்டது. தமிழக அரசியல் தலைவர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள். மக்களை முட்ட்டாள்களாக்கி முடிந்தவரை ஆதாயம் தேட முனைகிறார்கள்.

தங்களது அரசியல் லாபத்திற்காக விளையாட்டில் அரசியலை புகுத்தக் கூடாது. ஆனால் தென்னிந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றார் ரணதுங்கா.

Story first published: Monday, April 1, 2013, 8:21 [IST]
Other articles published on Apr 1, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+