குத்துச் சண்டை தரவரிசை-விஜேந்தர் 'நம்பர்-2'
டெல்லி: சர்வதேச குத்துச்சண்டை தரவரிசையில் 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விஜேந்தர் சிங் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வீரர்களுக்கான தர வரிசையை வெளியிட்டுள்ளது. 75 கிகி பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலம் வென்று பெருமை தேடி தந்த விஜேந்தர் சிங் 1700 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தை கியூபாவின் கோரியா எமிலியோவும், மூன்றாவது இடத்தை வெனிசுலாவின் பிளான்கோ பாரொ அல்போன்சாவும் கைப்பற்றியுள்ளனர்.
48 கிகி பிரிவில் இந்தியாவின் தாக்ஹோம் நானோ சிங் 1400 புள்ளிகளுடன் 5வது இடத்தையும் பிடித்தனர்.
ஜிதேந்தர் 13வது இடம்...
51 கிகி பிரிவில் ஜிதேந்தர் குமார் 837.5 புள்ளிகளுடன் 13வது இடத்தையும், சுரன்ஜோய் சிங் 800 புள்ளிகளுடன் 14வது இடத்தையும் பிடித்துள்ளனர். 57 கிகி பிரிவில் அகில்குமார் (1050 புள்ளிகள்) 9வது இடத்தை பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications