Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் புடை சூழ 'ஹேப்பி பர்த் டே' கொண்டாடிய டோணி!

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, தனது 32வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் புடை சூழ கேக் வெட்டி கொண்டாடிய டோணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் அன்பில் நனைந்து போய் விட்டார்.

டோணி தற்போது காயம் காரணமாக முத்தரப்புத் தொடரில் விளையாடவில்லை. இருப்பினும் அங்குதான் தொடர்ந்து முகாமிட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று முதல் 32

நேற்று முதல் 32

டோணிக்கு நேற்று 32வது பிறந்த நாளாகும். இதை தனது அணி வீரர்களுடன் சிறப்பாக கொண்டாடினார் டோணி.

மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களும்

மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களும்

இந்தக் கொண்டாட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்களும் திரளாக கலந்து கொண்டதால் டோணிக்கு குஷியாகி விட்டது.

முகத்தில் கேக்கை அப்பி

முகத்தில் கேக்கை அப்பி

டோணி முகத்தில் கேக்கை எடுத்து அப்பி வீரர்கள் விளையாடி விட்டனர்.

டிவிட்டரில் மகிழ்ச்சி

டிவிட்டரில் மகிழ்ச்சி

தனது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து டிவிட்டரில் படத்துடன் செய்தி போட்டுள்ளார் டோணி.

பிராவோவுக்கு நன்றி

பிராவோவுக்கு நன்றி

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் வேயன் பிராவோவும் இதில் முக்கியமான நபராவார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரும் கூட, எனவே பிராவோவுக்கும் இதர மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களுக்கும் ஸ்பெஷலாக நன்றி கூறியுள்ளார் டோணி.

அன்புக்கு நன்றி

அன்புக்கு நன்றி

டோணியின் செய்தியில், என் முகத்திலும், தலையிலும் கேக்கை அப்பிய வீரர்களுக்கு குறிப்பாக பிராவோவுக்கு நன்றி. அனைவரின் அன்புக்கும் நன்றி. உங்களது ஆதரவுக்கும் நிறைய நன்றி என்று கூறியுள்ளார் டோணி.

ராசி எண்ணில் கேக்

ராசி எண்ணில் கேக்

டோணியின் ராசி எண் 7 ஆகும். எனவே கேக்கில் 7 என்ற எண்ணையும் இடம் பெற வைத்திருந்தனர்.

Story first published: Monday, July 8, 2013, 14:03 [IST]
Other articles published on Jul 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+