For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'சிங்கத் தலைவி' செரீனாவை வீழ்த்திய இவனோவிக்கை விரட்டியடித்த 'சின்னப் பொண்ணு' போச்சார்ட்!

மெல்போர்ன்: செரீனா வில்லியம்ஸை 4வது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சிகரமான முறையில் தோற்கடித்து, செரீனாவின் கோடானு கோடி ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திய அனா இவனோவிக்குக்கு ஆப்பு வைத்து விட்டார் 19 வயதே நிரம்பிய கனடா வீராங்கனை ஈஜின் போச்சார்ட்.

நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அபாரமான, அதிசய வீராங்கனையாக வலம் வரும் போச்சார்ட்டின் ஆட்டத்துக்கு முன் இவனோவிக்கால் நிற்க முடியாமல் போய் விட்டது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் போச்சார்ட். இதுதான் வரது முதல் கிராண்ட் ஸ்லாம் அரை இறுதிப் போட்டி என்பதால் போச்சார்ட் பெரும் உற்சாகமடைந்துள்ளார்.

சிங்கத்தை வீழ்த்திய இவனோவிக்

சிங்கத்தை வீழ்த்திய இவனோவிக்

செரீனா வில்லியம்ஸ், 4வது சுற்றில் இவனோவிக்கிடம் தோற்றபோது அவரை விடவும் அவரது ரசிகர்கள்தான் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

போட்டுத் தாக்கிய போச்சார்ட்

போட்டுத் தாக்கிய போச்சார்ட்

ஆனால் காலிறுதிப் போட்டியில் இவனோவிக்கையே போட்டுத் தாக்கி விட்டார் போச்சார்ட். 19 வயதான இந்த கனடா இளம் வீராங்கனையின் படு சூடான ஆட்டத்துக்கு முன்பு இவனோவிக்கால் நிற்க முடியவில்லை.

புதுமுகம்.. ஆனாலும் செம ஆட்டம்

புதுமுகம்.. ஆனாலும் செம ஆட்டம்

போச்சார்ட் ஒரு புதுமுக வீராங்கனைதான். ஆனால் அவரது ஆட்டம் ஆரம்பத்திலிருந்தே அமர்க்களமாக இருந்து வருகிறது. காலிறுதிப் போட்டியில் அவர் இவனோவிக்கை 5-7, 7-5, 6-2 என்ர செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். அரை இறுதியில் அவர் லி நாவை எதிர்கொள்கிறார்.

டாப் 20க்குள் என்ட்ரி

டாப் 20க்குள் என்ட்ரி

இந்தத் தொடரில் போச்சார்ட் வென்றால் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள மகளிருக்கான ரேங்கிங் வரிசையில் அவர் டாப் 20க்குள் நுழைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 21, 2014, 15:37 [IST]
Other articles published on Jan 21, 2014
English summary
Teenager Eugenie Bouchard reinforced her status as one of the games most exciting prospects by upsetting Ana Ivanovic to reach her first Grand Slam semi-final at the Australian Open Tuesday. The 19-year-old Canadian, the WTAs newcomer of the year in 2013, showed composure to come from a set down and beat the 14th-ranked Serb 5-7, 7-5, 6-2 and set up a last-four clash with Li Na.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X