Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் ஒரே நம்பிக்கை உடைந்தது.. மகளிர் டேபிள் டென்னிஸ்.. மணிகா பத்ரா அதிர்ச்சி தோல்வி

ஜப்பான்: டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு இருந்த ஒரே நம்பிக்கையான மணிகா பத்ராவும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய நாளிலும் இந்திய அணி பெரும் அளவில் சறுக்கல்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் டேபிள் டென்னிஸ் 3வது சுற்றில் போட்டியிட்ட மணிகா பத்ரா நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளார்.

 தொடக்கம் முதல் ஆதிக்கம்

தொடக்கம் முதல் ஆதிக்கம்

முதல் 2 சுற்றுகளில் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மணிகா, இன்று 3வது சுற்றில் ஆஸ்திரியா வீராங்கனை சோனியா பால்கானோவாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆஸ்திரிய வீராங்கனையின் கையே ஓங்கி இருந்தது. இதனால் முதல் சுற்றை 8 -11 என்ற கணக்கில் மணிகா பத்ரா இழந்தார்.

படுதோல்வி

படுதோல்வி

2வது சுற்றில் மீண்டு வருவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மணிகா பத்ரா தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனை சாதூர்யமாக பயன்படுத்திக்கொண்டுள்ள எதிரணி வீராங்கனை சோனியா, அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து 2வது செட்டை 2 - 11 என்ற கணக்கிலும், 3வது செட்டை 5 - 11 என்ற கணக்கிலும், 4வது சுற்றிலும் 7 -11 என்ற கணக்கில் போட்டியை வென்றார்.

 நம்பிக்கை உடைந்தது

நம்பிக்கை உடைந்தது

இந்திய வீராங்கனை மணி பத்ராவால், ஒரு செட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால் போட்டி வெறும் 27 நிமிடங்களில் முடிவுற்றது. இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்கத்தை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மணி பத்ரா தோல்வியடைந்ததால் அவரின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்துள்ளது.

சுதிர்தா

சுதிர்தா

இதே போல இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளார். போர்ச்சுகல் வீராங்கனை ப்யு யூவை எதிர்கொண்ட அவர், 11-3, 11-3,11-5, 11-5 என்ற நேர் செட்களில் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

Story first published: Monday, July 26, 2021, 15:10 [IST]
Other articles published on Jul 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+