Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது பதக்கப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா பாகிஸ்தானின் மோசமான நிலை

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் அனைத்துப்போட்டிகளும் முடிவடைந்துள்ளதால், எந்தெந்த அணிகள் எவ்வளவு பதக்கங்களை வென்றுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Tokyo Olympics அசத்திய India.. Pakistan நிலை என்ன தெரியுமா?

உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கியது. கடந்தாண்டே நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு பதக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் என விறுவிறுப்பாக நடைபெற்றது. உலக நாடுகள் பதக்கங்களை குவித்துள்ளது.

ஒலிம்பிக் நிறைவடைந்தது

ஒலிம்பிக் நிறைவடைந்தது

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இறுதி நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக்கில் இந்தாண்டு இந்தியாவுக்கு முதல் சில நாட்கள் ஏமாற்றமாக இருந்தாலும், கடைசி சில நாட்கள் பதக்க வேட்டையாக இருந்துள்ளது. மொத்தமாக இந்தாண்டு இந்தியா 7 பதக்கங்களை டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்றுள்ளது.

பதக்க வேட்டை

பதக்க வேட்டை

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் ஒரு வார காலம் எந்தவித பதக்கமும் பெறாமல் ஏமாற்றம் மட்டுமே இந்தியாவுக்கு இருந்து வந்தது. அதன் பின்னர் தங்கம் வெல்வார் என இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

லாவ்லினா

லாவ்லினா

இவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் இளம் வீராங்கனை லாவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார். சீனியர் வீராங்கனை மேரி கோம் கூட காலிறுதியில் வெளியேறிய நிலையில் தனது முதல் ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தினார். காலிறுதிப்போட்டி வரை படு வேகமாக இவர் கொடுத்த பஞ்ச்-கள் முன்னாள் வீரர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்திய ஹாக்கி அணி

இந்திய ஹாக்கி அணி

இதன் பின்னர் மல்யுத்தப்போட்டியில் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதே போல இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

தங்கம்

தங்கம்

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் மட்டும் கிடைத்தாக குறையிருந்த சூழலில் நேற்று அதையும் தீர்த்து வைத்தார் நீரஜ் சோப்ரா. நேற்று நடைபெற்ற =ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து, ஒலிம்பிக்கில் தடகளப்பிரிவில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 48வது இடத்தை பிடித்துள்ளது.

பதக்க பட்டியல்

பதக்க பட்டியல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்துள்ளது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் வென்றுள்ளது. போட்டியை நடத்தி வரும் ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 58 பதக்கங்களை வென்று 3வது இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து 22 தங்கம் உட்பட 65 பதக்கங்களுடன் 4ம் இடம் வகித்து வருகிறது. ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 20 தங்கம் உட்பட 71 பதக்கங்களுடன் 5ம் இடம் வகித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 17 தங்கம், 7 வெள்ளி, 22 வெண்கலம் வென்று 46 பதக்கங்களுடன் 6வது இடத்தையே பிடித்துள்ளது. சிரியாக ஒரே ஒரு வெண்கலப்பதக்கத்துடன் 86வது இடத்தை பிடித்து கடைசி அணியாக உள்ளது சிரியா.

பாகிஸ்தான் எத்தனை பதக்கம்

பாகிஸ்தான் எத்தனை பதக்கம்

இந்தியா இந்த முறை ஒரு தங்கப்பதக்கத்துடன் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளது என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த முறை பாகிஸ்தான் வீரர், வீராங்கனைகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அந்நாடு ஒரு பதக்கத்தை கூட வெல்லாமல் பதக்க பட்டியலில் இடம்பெறவில்லை.

Story first published: Sunday, August 8, 2021, 17:26 [IST]
Other articles published on Aug 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+