For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம்... புதிய வரலாறு படைத்த பவினா பட்டேல்.. பெருமை கொள்ளும் இந்தியா!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் தொடரில், இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ள பவினா படேல் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

பாராலிம்பிக் போட்டிகள்

பாராலிம்பிக் போட்டிகள்

வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் தகுதிச்சுற்று முதலே சிறப்பாக விளையாடி வந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இறுதி சுற்று

இறுதி சுற்று

6வது நாளான இன்று இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. காலை 7:15 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் உலகின் நம்பர்.1 வீராங்கனை ஸோ யிங்-குடன் பவினா படேல் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 7-11, 5-11, 6-11 என்ற நேர் செட் கணக்கில் பவினா தோல்வி அடைந்தார். இதனால், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. எனினும், டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுதான். இதன் மூலம், பவினா படேல் நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

பரபரப்பு போட்டி

பரபரப்பு போட்டி

19 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே சீன வீராங்கனை சோயி யிங் ஆதிக்கம் செலுத்தினார். ஒரு இடத்தில் கூட பவினாவால் மீண்டு வர முடியவில்லை. இதனால் முதல் சுற்றை வெறும் 6 நிமிடங்களில் சீன வீராங்கனை கைப்பற்றினார். 2வது சுற்றுக்கு வெறும் 5 நிமிடங்களே ஆனது. 3வது சுற்றிலாவது வென்று விட வேண்டும் என பவினா கடுமையாக போராடினார். இதனால் ஆட்டம் கடைசியில் பரபரப்பானது எனினும் சீன வீராங்கனையின் பக்கமே வெற்றி சென்றது.

புதிய வரலாறு

புதிய வரலாறு

இந்த வெள்ளிப்பதக்கத்தின் மூலம் பவினா புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாராலிம்பிக் வரலாற்றில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு சேர்ந்துள்ளது. இதே போல பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையும் அவரையே சேர்ந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். எனவே பவினா பட்டேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பதக்கங்கள்

பதக்கங்கள்

பவினா பட்டேல் இதுவரை 28 சர்வதேச தொடர்களில் பங்கேற்றுள்ளார். அதில் 5 தங்கப்பதக்கம், 13 வெள்ளிப்பதக்கம், வெண்கலப்பதக்கங்களை அவர் வென்றுள்ளார். தற்போது டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் வென்றுள்ள வெள்ளிப்பதக்கமும் இதில் இணைந்துள்ளது

Story first published: Sunday, August 29, 2021, 16:39 [IST]
Other articles published on Aug 29, 2021
English summary
Bhavina patel wins a silver medal in Tokyo Paralympics 2020, Creates a new history for india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+