Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Paralympics 2020: ஃபைனலில் பவினா படேல் போராடி தோல்வி - இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடரில், இந்திய அணிக்கு முதல் பதக்கமாக வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கம் வென்றுக் கொடுத்து பவினா படேல் நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கியது. இத்தொடர் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதிக போட்டியாளர்கள்

அதிக போட்டியாளர்கள்

இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

கொரோனா

கொரோனா

முதலில், தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக்சந்த் தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ்

இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் ஐந்தாவது நாளான நேற்று (ஆக.28), டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவினா பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்.

Recommended Video

The rocky road to the Tokyo Olympics - Part 2
வெள்ளிப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

இந்நிலையில், இன்று (ஆக.29) காலை 7:15 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் உலகின் நம்பர்.1 வீராங்கனை ஸோ யிங்-குடன் பவினா படேல் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 7-11, 5-11, 6-11 என்ற நேர் செட் கணக்கில் பவினா தோல்வி அடைந்தார். இதனால், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. எனினும், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுதான். இதன் மூலம், பவினா படேல் நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் தொடரின் போட்டிகள் குறித்த தகவலை நமது தமிழ் மைக்கேல் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.

Story first published: Sunday, August 29, 2021, 16:39 [IST]
Other articles published on Aug 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+