டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் அவனி லெக்ரா தங்கம் வென்று சாதித்துள்ளார்.

‘பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். தொடர் வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டாக அவர் உள்ளார். தேசமே அவரால் பெருமைப்படுகிறது’ - பிரதமர் மோடி வாழ்த்து
ஆடவர் உயரம் தாண்டுதல்: இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தல்.
இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியானது. 1.83 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் இருவருமே முதல் வாய்ப்பிலேயே தாண்டினர். தங்கப்பதக்கத்திற்காக மோதல்.
ஆடவர் உயரம் தாண்டுதல்: இறுதிப்போட்டியில் மாரியப்பனுடன் சேர்ந்து ஷரத் குமாரும் முதல் 3 இலக்குகளை தாண்டி அசத்தல்.
ஆடவர் உயரம் தாண்டுதல்: இறுதிப்போட்டியில் 1.77மீட்டர் உயரத்தையும் முதல் வாய்ப்பிலேயே தாண்டி அசத்தினார் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு.
ஆடவர் உயரம் தாண்டுதல்: இறுதிப்போட்டியின் முதல் வாய்ப்பில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.73 மீ உயரத்தை தாண்டி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஆடவர் துப்பாக்கிச் சுடுதல்: 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டி தொடங்கியது.
முதல் சுற்றில் இந்திய வீரர்கள் சிங்ராஜ் 2வது இடத்தையும், நார்வால் 7வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில், 68.55மீ என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றார்.
மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடு மதிப்பீட்டில் தகுதியற்றவர் என்று அறிவித்ததால் பாராலிம்பிக் ஆண்கள் F52 வட்டு எறிதலில் வினோத் குமார் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்
ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன
தேவேந்திர ஜஜாரியா 64.35 தூரம் வீசி வெள்ளிப் பதக்கமும் , சுந்தர் சிங் 64.01 தூரம் வீசி வெண்கலமும் வென்றுள்ளனர்.
இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெக்ரா தங்கம் வென்றார்.
இதுபோல் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார். ஒரே நாளில் இந்தியாவுக்கு இன்று 2 பதக்கம் கிட்டியுள்ளது.
உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் நிஷாத் குமார். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் இதுவாகும்.
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம். பவினா பட்டேலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வசீம் ஜாஃபர், விரேந்தர் சேவாக் ஆகியோர் பாராட்டு. இந்திய பெருமைக் கொள்கிறது என நெகிழ்ச்சி.
உலகின் நம்பர்.1 வீராங்கனை சீனாவின் ஸோ யிங்-குடன் பவினா படேல் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 7-11, 5-11, 6-11 என்ற நேர் செட் கணக்கில் பவினா தோல்வி அடைந்தார்
பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பவினா படேல் தோல்வி
சீனாவின் சோ யிங் தங்கப்பதக்கம் வென்றார்
இந்தியாவின் பவினா படேல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை
6வது வாய்ப்பிலும் பவுலாக வீசி ஏமாற்றம் கொடுத்தார் ரஞ்சீத் பாட்டி.பதக்க கனவு தகர்ந்தது.
6 வாய்ப்புகளில் 5 வாய்ப்புகளை பயன்படுத்தியுள்ள ரஞ்சீத் பாட்டியா தொடர்ந்து பவுலாக வீசி வருகிறார். இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.
இந்திய வீரர் ரஞ்சித் பாட்டியா தனது முதல் வாய்ப்பில் வீசியது பவுலானது. இந்த போட்டியில் மொத்தம் 6 வாய்ப்புகள் தரப்படும்.
பாராலிம்பிக்ஸ்: இந்தியாவின் ரஞ்சித் பாட்டியா பங்கேற்றிருக்கும் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிச்சுற்று தொடங்கியது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ரஞ்ஜீத் கலந்து கொள்கிறார்.
பாரா ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவினா பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதனால், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா படேல்.
நாளை (ஆக.29) காலை 7:15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவின் ஸோ யிங்-குடன் மோதுகிறார்.