Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Tokyo Paralympics 2020: டேபிள் டென்னிஸ் ஃபைனலில் பவினா படேல் - தொடும் தூரத்தில் தங்கம்

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் அபாரமாக விளையாடி இறுதிப் முன்னேறியுள்ளார். தங்கம் வெல்வாரா?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

பவினா படேல்

பவினா படேல்

தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக்சந்த் தேசிய கொடியை ஏந்திச் சென்றார். வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொண்டு விளையாடி வருகிறது. நான்காவது நாளான நேற்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். இதில், 3-0 என்ற செட் கணக்கில் காலிறுதிக்கு பவினா தகுதி பெற்றார்.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

இதனையடுத்து செர்பிய வீராங்கனை போரிஸ்லாவை எதிர்த்து காலிறுதி போட்டியில் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ஆம் தரநிலை வீராங்கனையான போரிஸ்லாவை 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்பின் நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவினா பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா படேல். நாளை (ஆக.29) காலை 7:15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவின் ஸோ யிங்-குடன் மோதுகிறார்.

ராகேஷ் குமார்

ராகேஷ் குமார்

இதனிடையே ஆடவருக்கான வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். அவர் மொத்தம் 699 புள்ளிகளைப் பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இருவரும் பதக்கம் வெல்வார்கள் என அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

அரையிறுதி போட்டி முடிந்த பிறகு பேசிய பவினா, "நான் எனது நூறு சதவிகித பங்களிப்பை கொடுக்கிறேன். இறுதிப் போட்டிக்கு நான் மனதளவில் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். பவீனாவின் தந்தை பேசுகையில், "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பவினா பட்டேல் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்லப் போகிறார். கடந்த 20 ஆண்டுகளாக, அவர் டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார்" என்றார்.

Story first published: Saturday, August 28, 2021, 11:23 [IST]
Other articles published on Aug 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+