Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை மாதத்தில் டிரெண்டிங்கில் இருந்த 5 வீரர்கள்.. ஓய்வு பெற்றும் ஆதிக்கம் செலுத்திய 2 பேர்

மும்பை : உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்ற நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருந்த ஐந்து விளையாட்டு வீரர்கள் குறித்து ஒர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் பட்டியில் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

ஒர்மேக்ஸ் என்ற இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு துறையில் இந்தியாவில் சிறந்து விளங்கியவர்கள் பட்டியல் குறித்து வெளியிடும். இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடர்பான பட்டியலை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

Top 5 most popular sportspersons in India in November 2023- ormax media

இதில் ஆச்சரியப்படும் விதமாக இந்தியாவில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகளாக ஆன நிலையில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருப்பவர் விராட் கோலி நவம்பர் மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அப்போது சச்சின் டெண்டுல்கரின் சதம் சாதனையை முறியடித்து உலக ரெக்கார்ட் படைத்தார். இதனால் விராட் கோலி இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இதேபோன்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகிய மகேந்திர சிங் தோனி. நவம்பர் மாதத்தை பொறுத்தவரை தோனி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விளையாட்டு வீரராக இரண்டாவது இடத்தில் இருந்தார். இது தோனி எந்த அளவுக்கு மாஸ் வீரராக விளங்குகிறார் என்பதை காட்டுகிறது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. உலக கோப்பையில் தொடர்ந்து தோல்வியே தழுவாமல் இறுதிப்போட்டி வரை இந்திய அணி அழைத்துச் சென்றதால் ரோகித் சர்மா இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். இந்தியாவில் பிரபலமாக இருந்த நான்காவது விளையாட்டு வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளங்குகிறார்.

கால்பந்து ஜாம்பவானான ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவில் விளையாடி வருகிறார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் சச்சின் டெண்டுல்கர். இன்னும் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருவது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Story first published: Monday, December 25, 2023, 12:43 [IST]
Other articles published on Dec 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+