Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிக்கெட் விலை வெறும் ரூ.49 தான்..சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்கள் விளையாடுவதை பார்க்கலாம்

சென்னை : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றிருந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். முதல் முறையாக காலிறுதி சுற்று வரை முன்னேறி இந்திய வீராங்கனைகள் சாதனை படைத்த நிலையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் விளையாட்டை நீங்கள் அப்போது பார்த்து விரும்பி இருந்தீர்கள் என்றால் சென்னையில் ஐபிஎல் பாணியில் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

Table tennis Chennai Manika Batra

மணிக்கா பத்ரா, சரத் கமல், சத்யன் ஞானசேகரன், நைஜீரிய வீராங்கனை காதிரி அருணா உள்ளிட்டவர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இந்த தொடர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடக்கின்றன.

ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காக இரண்டு டிக்கெட் விலை வெறும் 49 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காக விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விஐபி இருக்கைகளுக்கு 99 ரூபாய் மற்றும் 1499 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

vip பார்வையாளர்கள் மாடத்தில் unlimited உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை இலவசமாக கிடைக்கும். மேலும் விஐபி இருக்கையில் அமர்ந்து போட்டியை பார்ப்பவர்கள் வீரர் வீராங்கனைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டை புக் மை ஷோ ஆப்பிலும் நேரு உள்விளையாட்டு அரங்கில் கேட் நம்பர் ஒன்றில் காலை பத்து மணி முதல் மாலை 6:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

இறுதிப் போட்டிக்கு மட்டும் ஆரம்ப டிக்கெட் விலை 99 ரூபாயாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் ஆன்லைனில் ஜியோ சினிமாவிலும் பார்க்கலாம். இந்த போட்டியில் எந்த அணியில் எந்த வீரர், வீராங்கனைகள் விளையாடுகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

அகமதாபாத் SG பைபர்ஸ்: மனுஷ் ஷா, பெர்னாடெட் ஸ்ஸாக்ஸ் (ருமேனியா), லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ரீத் டென்னிசன், பிரிதா வர்த்திகர் மற்றும் ஜாஷ் மோடி

சென்னை லயன்ஸ்: அச்சந்தா ஷரத் கமல், சகுரா மோரி (ஜப்பான்), ஜூல்ஸ் ரோலண்ட் (பிரான்ஸ்), பொய்மண்டி பைஸ்யா, மௌமா தாஸ் மற்றும் அபிநந்த் பிபி

தபாங் டெல்லி TTC: சத்தியன் ஜி, ஒரவன் பரனாங் (தாய்லாந்து), தியா சித்தலே, ஆண்ட்ரியாஸ் லெவென்கோ (ஆஸ்திரியா), யஷான்ஷ் மாலிக் மற்றும் லக்ஷிதா நரங்

அத்லீட் கோவா சேலஞ்சர்ஸ்: ஹர்மீத் தேசாய், யாங்சி லியு (ஆஸ்திரேலியா), யஷஸ்வினி கோர்படே, சுதன்ஷு குரோவர், சயாலி வானி மற்றும் மிஹாய் போபோசிகா (இத்தாலி)

ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ்: மௌமிதா தத்தா, சோ சியுங்மின் (தென் கொரியா), சுதாசினி சாவெட்டாபுட் (தாய்லாந்து), ஸ்நேஹித் எஸ்.எஃப்.ஆர், ரோனித் பஞ்சா மற்றும் நித்யஸ்ரீ மணி

பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ்: மனிகா பத்ரா, அல்வாரோ ரோபிள்ஸ் (ஸ்பெயின்), லில்லி ஜாங் (அமெரிக்கா), ஜீத் சந்திரா, தனீஷா கோடேச்சா மற்றும் அமல்ராஜ் ஆண்டனி

புனேரி பால்டன் டேபிள் டென்னிஸ்: அய்ஹிகா முகர்ஜி, நடாலியா பஜோர் (போலந்து), ஜோவா மான்டீரோ (போர்ச்சுகல்), அங்கூர் பட்டாசார்ஜி, அனிர்பன் கோஷ் மற்றும் யாஷினி சிவசங்கர்

யு மும்பா டிடி: மானவ் தக்கர், சுதிர்தா முகர்ஜி, அருணா குவாட்ரி (நைஜீரியா), ஆகாஷ் பால், காவ்யஸ்ரீ பாஸ்கர் மற்றும் மரியா சியாவோ (ஸ்பெயின்)

Story first published: Wednesday, August 14, 2024, 15:43 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+