For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷூக்கு வைகோ பாராட்டு!

By Mayura Akilan

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷூக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

Vaiko congratulates Satish Kumar Sivalingam

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்ற காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில், பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். அதுமட்டுமின்றி பளு தூக்கும் போட்டியில் புதிய சாதனைச் சரித்திரமும் படைத்துள்ளார்.

தான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்துள்ள விளையாட்டு வீரர் சதீசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மேன்மேலும் வெற்றிகளைக் குவித்திட, சாதனைகள் தொடர்ந்திட மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 30, 2014, 10:46 [IST]
Other articles published on Jul 30, 2014
English summary
MDMK general secretary Vaiko congratulated Satish Kumar Sivalingam, who won a gold medal in weightlifting at the Commonwealth Games in Glasgow on Sunday night. Satish, 22, lifted a total of 328kg (149+179) to pip the 2010 CWG gold medallist Ravi Katulu, who had to be content with a silver medal.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+