Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பாலிவுட் சூப்பர்ஸ்டார் - வாழ்த்து கூறிய விராட் கோலி

மும்பை : தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் அவர் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவிற்கு அமிதாப் பச்சனின் பங்களிப்பு மகத்தானது என்று அவர் பாராட்டியுள்ளார்.

இந்திய சினிமாவின் 'பிக் பி'

இந்திய சினிமாவின் 'பிக் பி'

பாலிவுட் சூப்பர்ஸ்டார், பிக் பி என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் அமிதாப் பச்சன், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது தென்னிந்திய மொழிப் படங்களிலும் இவர் தனது முத்திரைகளை பதித்து வருகிறார்.

தாதாசாகேப் பால்கே விருது

தாதாசாகேப் பால்கே விருது

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய இந்திய அரசின் உயர்ந்த விருதுகளை பெற்றுள்ள அமிதாப் பச்சன், தற்போது தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார்.

குடியரசு தலைவர் கையால் விருது

குடியரசு தலைவர் கையால் விருது

கடந்த செப்டம்பரில் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் அமிதாப் பச்சன் விருதினை பெற்றுக் கொண்டார்.

விராட் கோலி வாழ்த்துப்பதிவு

அமிதாப் பச்சனுக்கு சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அமிதாப் பச்சனுக்கு தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி பாராட்டு

விராட் கோலி பாராட்டு

இநதிய சினிமாவிற்கு அமிதாப் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளதாக விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பலருக்கு உத்வேகத்தையும் அமிதாப் அளித்து வருவதாகவும் விராட் புகழ்ந்துள்ளார்.

விராட்டை பாராட்டிய அமிதாப்

விராட் கோலியின் நலம்விரும்பிகளில் ஒருவராக அமிதாப் பச்சன் எப்போது விளங்கி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் 50 பந்துகளில் 94 ரன்களை குவித்த விராட் கோலிக்கு அப்போது அமிதாப் தனது பாராட்டை தெரிவித்திருந்தார். அதற்கு கோலியும் பதில் பதிவு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 30, 2019, 17:28 [IST]
Other articles published on Dec 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+