For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோலியின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம்

மும்பை : தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் திருப்புமுனையாக கடந்த 2014ல் நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் அமைந்ததாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Recommended Video

CSK Planning to start early practice for IPL 2020

இந்த சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்திய நிலையில், அதன்பின்பு அவரது ஆட்டம் சிறப்பாக அமைய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உதவியதாகவும் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தன்னுடைய கேரியரில் சிறப்பாக தான் சாதனைகளை நோக்கி செல்வதற்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியா அவுட் ஆவாங்க.. 118 வருட மோசமான ரெக்கார்டை உடைத்த இங்கிலாந்து கேப்டன்!இப்படியா அவுட் ஆவாங்க.. 118 வருட மோசமான ரெக்கார்டை உடைத்த இங்கிலாந்து கேப்டன்!

சாதனை நாயகன் கோலி

சாதனை நாயகன் கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி, தன்னுடைய கிரிக்கெட் கேரியரை சிறப்பாக அமைத்துக் கொண்டுள்ளார். இவரது தலைமையின்கீழ் ஐசிசியின் முக்கிய கோப்பைகளை இந்திய அணி அடைய முடியாவிட்டாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி போன்ற பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

50 ரன்களை தொடாத விராட்

50 ரன்களை தொடாத விராட்

இந்நிலையில், பிசிசிஐ சார்பில் மயங்க் அகர்வாலுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் பேசிய கேப்டன் விராட் கோலி, கடந்த 2014ல் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணமே தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் சிறந்த திருப்புமுனையாக அமைய காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் சொற்ப ரன்களிலேயே வெளியேறினார் விராட். ஒரு இன்னிங்சில் கூட 50 ரன்களை தொடவில்லை.

சாதனை பயணம்

சாதனை பயணம்

இதையடுத்து சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு பலகட்டங்களில் ஆலோசனை வழங்கியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைகள் தன்னுடைய கேரியரில் சாதனைகளை நோக்கிய பயணத்திற்கு உதவியதாக அவர் கூறியுள்ளார். இதேபோல ரவி சாஸ்திரியும் தனக்கும் ஷிகர் தவானுக்கும் ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக உதவி புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் சிறப்பு

சர்வதேச அளவில் சிறப்பு

இதையடுத்து தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக அமைத்துக் கொண்டதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் சாதனை நாயகனாக திகழ்ந்து வருகிறார் விராட் கோலி. மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றிலும் 50க்கும் மேற்பட்ட சராசரிகளை கொண்டுள்ளார்.

Story first published: Saturday, July 25, 2020, 14:10 [IST]
Other articles published on Jul 25, 2020
English summary
2014 is always going to be a milestone in my career -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X