Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேக்ஸ்வெல், வார்னர், டிவில்லியர்ஸ் 'வெடி' உறுதி... கோஹ்லியும் வெளுப்பார்.. அக்ரம் நம்பிக்கை!

சிட்னி: 2015 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் கிளன் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்க வீரர் ஏப் டிவில்லியர்ஸ் ஆகியோர் பிரமாதமாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன். இந்திய வீரர்களில் டோணியை விட விராத் கோஹ்லி பிரகாசிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் குறித்து பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டுள்ளது.

Wasim Akram backs AB de Villiers, David Warner to shine

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் யாரெல்லாம் பிரகாசிப்பார்கள் என்பது குறித்து வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், மேக்ஸ்வெல், வார்னர், டிவில்லியர்ஸ், சந்தேகமே இல்லாமல் இவர்கள் பட்டையைக் கிளப்புவார்கள்.

இவர்களிடம் தீப்பொறி பறக்கும் ஆட்டத் திறமை உள்ளது. நிச்சயம் பொறிந்து தள்ளுவார்கள். ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைப்பார்கள்.

டிவில்லியர்ஸ், போன மாதம்தான் 31 பந்துகளில் அதிவேகமாக சதம் போட்டு அசத்திய சாதனையாளர். எனவே அவரது ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்.

இந்தியாவுக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் மேக்ஸ்வெல்லும், வார்னரும் அபாரமான சதம் அடித்தவர்கள். இவர்களுக்கு பந்து வீசுவது நிச்சயம் எந்த பவுலருக்கும் சவாலான ஒன்றுதான்.

நான் பந்து வீசுவதாக இருந்தால் முதலில் இவர்களை அவுட் செய்யவே விரும்புவேன். இல்லாவிட்டா்ல் நிம்மதியாக பந்துவீச முடியாது. இவர்கள் நின்று விட்டால் நிச்சயம் அந்த அணி இமலாய ரன் குவிப்பை மேற்கொள்ளும்.

பந்து பிட்ச் ஆகி, நன்றாக ஸ்விங் ஆகுமாறு வீசி, ஏமாற்றித்தான் இவர்களை அவுட் செய்ய முடியும். இது பந்து வீச்சாளர்களுக்கு நான் தரும் அட்வைஸ்.

இந்திய அணியில் கேப்டன் டோணிடைய விட விராத் கோஹ்லி சிறப்பாக ஆடும் வாய்ப்பு உள்ளது. அதிரடியாக ஆட இது கோஹ்லிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள்தான் நல்ல பார்மில் உள்ளன. மற்றவர்களுக்கு வாய்ப்பு குறைவுதான் என்றார் அக்ரம்.

Story first published: Thursday, February 12, 2015, 16:53 [IST]
Other articles published on Feb 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+