Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் நான் அப்பாவாகப் போகிறேன்.. வாசிம் அக்ரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் ஆஸ்திரேலிய மனைவி ஷனீரா அக்ரம் கர்ப்பம் தரித்துள்ளார். இதை அக்ரம் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

48 வயதாகும் அக்ரமின் 2வது மனைவிதான் ஷனீரா. இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஷனீரா - அக்ரம் திருமணம் பாகிஸ்தானில் எளிமையாக நடைபெற்றது.

முதல் மனைவி ஹூமா

முதல் மனைவி ஹூமா

அக்ரமின் முதல் மனைவி பெயர் ஹூமா. இவரை கடந்த 1995ம் ஆண்டு மணந்தார் அக்ரம்.

சென்னையில் மரணமடைந்த ஹூமா

சென்னையில் மரணமடைந்த ஹூமா

ஹூமா, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி உடல் நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

முதல் மனைவிக்கு இரு மகன்கள்

முதல் மனைவிக்கு இரு மகன்கள்

ஹூமா, அக்ரம் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

மகன்கள் முன்னிலையில் 2வது திருமணம்

மகன்கள் முன்னிலையில் 2வது திருமணம்

இதையடுத்து கடந்த ஆண்டு தனது இரு மகன்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் ஷனீராவை மணந்தார் அக்ரம்.

திரில்லாக இருக்கிறது...

திரில்லாக இருக்கிறது...

தற்போது ஷனீரா கர்ப்பம் தரித்துள்ளார். இதுகுறித்து அக்ரம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மிகவும் திரில்லாக இருக்கிறது. நானும், ஷனீராவும் எங்களது முதல் குழந்தையைத் தரிசிக்கத் தயாராகி வருகிறோம். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி... பேபி ஆன் தி வே... என்று கூறியுள்ளார் அக்ரம்.

Story first published: Tuesday, September 2, 2014, 10:40 [IST]
Other articles published on Sep 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+