
போப் பிரான்சிஸ்
இந்த இறுதிப் போட்டியில் போப் ஆண்டவர்கள் எங்கே வந்தார்கள் என்ற கேள்வி வருகிறது அல்லவா? அதாவது இறுதிப் போட்டியில் மோதுகின்ற அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர்தான் தற்போதைய போப் பிரான்சிஸ்.

கால்பந்து அணிக்கு போப் பெயர்
போப் பிரான்சிஸும் ஒரு கால்பந்து ரசிகர்தான். அர்ஜென்டினா நாட்டில் ஏற்கெனவே ஒரு உள்ளூர் அணிக்கு போப் பிரான்சிஸ் பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது.

போப் உருவத்துடன் வலம் வரும் ரசிகர்கள்
அத்துடன் தமது நாட்டுக்காகவே அவர் பிரார்த்தனை செய்வார் என்ற பெரும் நம்பிக்கை அர்ஜென்டினா ரசிகர்களுக்கு இருக்கிறது. தற்போதைய போட்டிகளின் போது போப் பிரான்சிஸ் உருவம் பொறித்த முகமூடி, அவரது சாயல் உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

வாடிகன் விளக்கம்
ஆனால் போப் பிரான்சிஸோ அர்ஜென்டினா நாட்டு அணிக்காக மட்டுமே பிரார்த்திக்கப் போவதில்லை.. இரண்டு அணிகளுமே வெல்ல வேண்டும் என்பதே போப்பின் விருப்பம் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் வாழ்த்து
கடந்த மாதம் தமது ட்விட்டர் பக்கத்தில் கூட, அனைத்து அணிகளுக்குமேதான் வாழ்த்தும் தெரிவித்திருந்தார் போப் பிரான்சிஸ்..

ஜெர்மனியின் பெனடிக்ட்
சரி மற்றொரு முன்னாள் போப் பற்றி சொன்னீர்களே என்கிறீர்களா? தற்போதைய போப் பிரான்சிஸுக்கு முன்னர் போப்பாக இருந்த பெனடிக்ட், அர்ஜென்டினாவுடன் மோதுகிற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் அந்த போப் தற்போதைய போப் பிரான்சிஸைப் போல விளையாட்டை ரசிப்பவர் அல்ல..

பெனடிக்ட்டுக்கு அழைப்பா?
இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு முன்னாள் போப் பெனடிக்ட்டை தற்போதைய போப் பிரான்சிஸ் அழைப்பு விடுப்பாரா என்றும் சில ஊடகங்கள் கேள்வி எழுப்பி இருந்தன. ஆனால் அப்படியான ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றும் வாடிகன் மறுப்பு தெரிவித்துள்ளது.

யாருடைய ஆசீர்வாதம் பலிக்கும்?
அதே நேரத்தில் இரண்டு போப்புகளும் தங்களது நாட்டு அணிகளுக்காக ஆசீர்வதித்தால் யாருடைய ஆசீர்வாதம்தான் பலிக்கும் என்ற கேள்வியையும் சில ஊடகங்கள் எழுப்பி சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











