சால்வடார்: உலகக் கோப்பையில் வலிமை வாய்ந்த நடப்பு சாம்பியனுக்கு ஸ்பெயினுக்கு ஏற்பட்ட தோல்வியைப் போல மற்றொரு பலமான உருகுவே அணியை உருக்குலைய வைத்தது கோஸ்டாரிகா அணி.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் ஸ்பெயினை மிக அவமானகரமாக தோற்கடித்தது நெதர்லாந்து. அதேபோல் நேற்று மற்றொரு வலிமையான உருகுவே அணியும் அதிர்ச்சி தோல்வியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 24வது நிமிடத்தில் பெனால்டி ஷாட்டின் மூலம் ஒரு கோல் அடித்த உருகுவே, அடுத்த கோலுக்காக பரபரப்பாக விளையாடியது. ஆனால் 54வது நிமிடத்தில் கோஸ்டாரிக்கா வீரர் கேம்ப்பெல் அடித்த கோலால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை அடைந்தன.
கோஸ்டாரிகாவின் ஆஸ்கர் டுவார்ட் அடுத்த கோலை அடித்தார். 3வது கோலை கோஸ்டாரிகாவின் மார்கோஸ் யுரீனா அடித்தார். இதனால் பலமான உருகுவே 1-3 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவிடம் வீழ்ந்தது.
உருகுவே வீரர் மாக்ஸி பெரெய்ராவுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த உலகக் கோப்பையில் முதலாவது சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்ட சம்பவமும் இந்த போட்டியில்தான் நிகழ்ந்தது.