ஹோண்டுராஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஈகுவடார்!
குரிடிபா: உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் அனல் பறக்கும் ஆட்டங்களில், இன்று ஈகுவடார் மற்றும் ஹோண்டுராஸ்க்கு இடையிலான ஆட்டத்தில் ஈகுவடார் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் "டி" பிரிவில் ஈகுவடார் மற்றும் ஹோண்டுராஸ் அணிகள் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே 1 கோல் அடித்து சமமான புள்ளிகளுடன் தொடர்ந்து விளையாடின. ஹோண்டுராஸ் அணியின் வீரர் கோஸ்ட்லியும், ஈகுவடார் அணியின் வீரர் வாலன்சியாவும் இந்த கோல்களைப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இடைவேளைக்குப் பிறகான இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஈகுவடார் அணி மீண்டும் ஒரு கோலை பதிவு செய்தது. இதற்குப் பின்பான ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணியால் சோபிக்க இயலவில்லை.இதனால் ஈகுவடார் அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
Story first published: Saturday, June 21, 2014, 14:04 [IST]
Other articles published on Jun 21, 2014


Click it and Unblock the Notifications