Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறையில் சொகுசு.. கொலை வழக்கில் கைதான சுஷில் ஸ்பெஷல் உணவு கேட்டு மனு..நறுக் பதில் கொடுத்த நீதிமன்றம்

டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில் குமார் தனக்கு டயட்டிற்காக ஸ்பெஷல் உணவுகள் வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

சாகர் தன்கத் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த டெல்லி போலீசார் சுஷில் குமாரையும், அவரின் உதவியாளரையும் சாலையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தகராறு

தகராறு

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தன்கத் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சாகர் தன்கத் கடுமையாக தாக்கப்பட்டார்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

பலத்த காயமடைந்த சாகர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுஷில் குமாரை தேடி வந்தனர். இதனால் கடந்த மே.23ம் தேதி சுஷில் குமார் மற்றும் உதவியாளர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். சுஷில் குமார் தற்போது டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 சுஷில் மனு

சுஷில் மனு

இந்நிலையில் சிறையில் உள்ள சுஷில் குமார் தனது டையட்டை சரியான முறையில் கடைப்பிடிக்க ஸ்பெஷல் உணவுகளை வழங்கும்படி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சுஷில் குமார் 2 முறை ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவர், அவர் அடுத்த போட்டிகளுக்கு தயாராக ஸ்பெஷல் உணவுகள் மற்றும் அவரின் உடற்பயிற்சி உபகரணம் வேண்டும் எனக்கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றம் காட்டம்

நீதிமன்றம் காட்டம்

சுஷில் குமாரின் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,கொலை வழக்கில் சிறையில் உள்ள சுஷில் குமார் எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக தான் உள்ளார். இங்கு சட்டம் அனைவருக்கும் பொதுவானவை ஆகும். எனவே டெல்லி சிறைச்சட்டம் 2018ன் படி இதுவரை சிறைவாசிகளுக்கு என்ன உணவு வழங்கப்பட்டு வருகிறதோ, சுஷில் குமாருக்கும் அதே ஆரோக்கியமான உணவுகள் தான் கொடுக்கப்படும் என நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

Story first published: Thursday, June 10, 2021, 10:15 [IST]
Other articles published on Jun 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+