For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீரென கீழே விழுந்த வர்ணனையாளர்.. காமன்வெல்த் போட்டிகளில் பரபரப்பு.. என்ன ஆனது?

பிர்மிங்கம்: காமன்வெல்த் தொடரில் வர்ணனையாளர் திடீரென உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wrestling bouts of Commonwealth games paused due to tha safety issues

காமன்வெல்த் தொடரின் 8வது நாள் போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 7 நாட்களாக பளுதூக்குதல் போட்டிகளில் இந்திய அணி பதக்கத்தை குவித்த நிலையில், இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்கியுள்ளன.

இன்று மதியம் தொடங்கிய நடைபெற்ற ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ராங் புனியா பங்கேற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பஜ்ராங் புனியா வெற்றி பெற்றார். மேலும் மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். இதே போல தீபக் புனியாவும் 86 கிலோ எடைப்பிரிவில் தனது முதல் போட்டியிலேயே வெற்றி கண்டார்.

இந்நிலையில் இந்த போட்டிகளின் போது வர்ணனையாளர் ஒருவர் திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனையடுத்து களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் உடனடியாக அரங்கத்தை விட்டு, வெளியேற்றப்பட்டனர். மேலும் போட்டிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

பாதுகாப்பு குறைபாடுகளை எதேனும் உள்ளதா என அரங்கம் முழுவதும் ஆராய்ந்து பார்த்த அதிகாரிகள், சுமார் 1 மணி நேரத்திற்கு பின் மீண்டும் தொடங்கும் என அறிவித்தனர். கீழே விழுந்த வர்ணனையாளர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Story first published: Friday, August 5, 2022, 18:10 [IST]
Other articles published on Aug 5, 2022
English summary
Wrestling bouts of Commonwealth games ( காமன்வெல்த் போட்டிகள் ) காமன்வெல்த் போட்டிகளில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளின் போது தீடீரென வர்ணனையாளர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+