எனக்கு பெரியண்ணன் இருக்காரு... சூப்பர் ஹீரோல்லாம் தேவையில்லை... சஹல் கலாய்
மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள இந்திய அணி வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களை பிசியாக வைத்துக் கொள்கின்றனர்.
Recommended Video
இதில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் பௌலர் யுஸ்வேந்திர சஹல் தங்களை ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொள்வதிலும் பாராட்டுவசிதில் ரொம்பவே பிசி.

இந்நிலையில் தற்போது ரோகித்துடன் தான் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சஹல், எங்க பெரியண்ணன் இருக்காரு, சூப்பர் ஹீரோக்கள் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச போட்டிகள், ஐபிஎல் உள்ளிட்டவை முடங்கியுள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களே அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதிலும் சக வீரர்கள் போடும் போஸ்ட்களுக்கு மாற்றி மாற்றி கலாய்த்து கொள்வதும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதில் முதலிடத்தில் துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் பௌலர் யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொள்வதும் பாராட்டுவதுமாக இவர்கள் பொழுது இனிதே கழிகிறது. ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டெயின்மெண்ட்டாக இது இருகிறது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோகித்துடன் தான் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சஹல், எங்க பெரியண்ணன் இருக்காரு. சூப்பர் ஹீரோக்கள் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications