Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாடி ராசாத்தி... வயதானாலும் சாதிப்பதில் இன்னும் அசத்தும் செரீனா!

பாரீஸ்: வயதானாலும் செரீனா வில்லியம்ஸின் சாதனை தாகம் இன்னும் அடங்கவில்லை, இளம் புயல்கள் எத்தனை வீசினாலும் இவரது வேகம் முடங்கவில்லை. வயது ஏற, ஏற, இன்னும், இன்னும் என்று அவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தனது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நேற்று பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

கடந்த 17 வருடமாக அசத்தலாக ஆடி வரும் செரீனா வில்லியம்ஸ் செய்யாத சாதனையே இல்லை. 33 வயதான செரீனாவின் சாதனை தொடர்வதுதான் பலருக்கும் உத்வேகமாக உள்ளது.

உலக சாதனைக்கு இன்னும் 2

உலக சாதனைக்கு இன்னும் 2

உலக அளவில் (Oper era) 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளராக ஸ்டெபி கிராப் இருக்கிறார். அவரது சாதனையை சமன் செய்ய இன்னும் 2 பட்டங்களே செரீனாவுக்குத் தேவை.

எதிரில் யார் நின்றாலும்

எதிரில் யார் நின்றாலும்

தன்னை எதிர்த்து மோதுவது யார் என்று அச்சப்படுவதே இல்லை செரீனா. தனது முழு பலத்தையும், திறமையையும் திரட்டி வாயடைத்துப் போக வைத்து விடுவார் செரீனா. 33 வயதானவர் ஆடும் ஆட்டமா என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

காதலர் வந்த பிறகு

காதலர் வந்த பிறகு

செரீனா கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகுதான் புயல் வேகத்திற்கு மாறத் தொடங்கினார். காரணம், அவருக்குக் கிடைத்துள்ள காதலரும், பிரான்ஸைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளருமான பாட்ரிக் மொரட்டோக்ளோதான். அவர் வந்த பிறகு 7 பட்டங்களை வென்றுள்ளார் செரீனா.

தொடர் காயத்திலிருந்து மீண்டு

தொடர் காயத்திலிருந்து மீண்டு

பாட்ரிக் வருவதற்கு முன்பு வரை அவ்வப்போது காயமடைந்து விடுவார் செரீனா. மேலும் உத்வேகமும் இல்லாதவராக இருந்தார். ஆனால் பாட்ரிக் வந்து எல்லாவற்றையும் மாற்றிப் போட்டார்.

இன்னும் என்ன செய்யப் போகிறாய்

இன்னும் என்ன செய்யப் போகிறாய்

அடுத்து விம்பிள்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரவுள்ளன. அவற்றையும் செரீனா வெல்வார் என பாட்ரிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அசைக்க முடியாத நிலையில்

அசைக்க முடியாத நிலையில்

தற்போதைக்கு செரீனா அசைக்க முடியாத வீராங்கனையாக உள்ளார். அவருக்கு சமமான போட்டியாளர்களாக கருதப்படும் மரியா ஷரபோவா, அனா இவனோவிக், கரோலின் ஒஸ்னியாக்கி ஆகியோர் தற்போது பார்மில் இல்லை. பெட்ரோ கிவிட்டோவா, விக்டோரியா அஸரென்கா ஆகியோரும் பலமாக இல்லை.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு

இன்னும் 2 ஆண்டுகளுக்கு

இந்த நிலை காரணமாக இன்னும் 2 ஆண்டுகளுக்கு செரீனா வில்லியம்ஸ் அசத்தலாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏதாவது புதிய இளம் வீராங்கனை வந்து அப்செட் செய்தால்தான் உண்டு.

பெஸ்ட் யார்

பெஸ்ட் யார்

தற்போது செரீனாவின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து உலகின் மிகச் சிறந்த வீராங்கனைகளான மெளரீன் கனோலி, மார்கரெட் கோர்ட், மார்ட்டினா நவரத்திலோவா, ஸ்டெபி கிராப் ஆகியோருடன் செரீனா வில்லியம்ஸும் இணைந்துள்ளார். இதில் யார் பெஸ்ட் என்ற விவாதமும் சூடு பறக்கத் தொடங்கி விட்டது.

இம்ப்ரஸ் பண்ணிட்டார் செரீனா.. மார்ட்டினா

இம்ப்ரஸ் பண்ணிட்டார் செரீனா.. மார்ட்டினா

பாரீஸில், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வழங்கிப் பேசிய மார்ட்டினா நவரத்திலோவா இதுகுறித்துக் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை செரீனாதான் பெஸ்ட் என்று வாயாரப் பாராட்டி மகிழ்ந்தார்.

Story first published: Sunday, June 7, 2015, 11:18 [IST]
Other articles published on Jun 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+