Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஆண்டுகளுக்குப் பிறகு செரீனா இல்லாத ஆஸ்திரேலிய ஓபன்

மெல்போர்ன்: இந்தாண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் இன்று துவங்குகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு செரீனா வில்லியம்ஸ் விளையாடாத ஆஸ்திரேலிய ஓபன் போட்டி களையிழந்து காணப்படுகிறது.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று துவங்குகிறது. ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர், ரபேல் நடால் என்று பட்டம் வெல்லக் கூடியவர் என்று கணிப்பதற்கு பல பெயர்கள் உள்ளன.

ஆனால், மகளிர் ஒற்றையர் பிரிவில் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் இல்லாத வெறுமை உணரப்படுகிறது. கடந்தாண்டு நடந்த போட்டியில் கர்ப்பமாக இருந்த நிலையில் பங்கேற்று பட்டம் வென்றவர் செரீனா வில்லியம்ஸ். தாயகி, திருமணம் செய்த நிலையில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முழு உடல்தகுதி பெறவில்லை என்று போட்டியில் இருந்து செரீனா விலகினார்.

பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு

பட்டம் வெல்ல யாருக்கு வாய்ப்பு

செரீனா இல்லாததால், தற்போதைய நிலையில், மகளிர் பிரிவில் பட்டம் வெல்லக் கூடியவர் என்று ஐந்து பெண்களை கூறலாம். அதுவும் போட்டிக்கான தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள சிமோனா ஹாலேப், கரோலின் வோனியாகி, கேப்ரின் முகுருசா, எலினா ஸ்விதோலினா, செரீனாவின் மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸ். இவர்களில் முகுருசா மட்டுமே, 2016ல் இருந்து ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர். வீனஸ் மற்றும் ஹாலேப் கிராண்ட் ஸ்லாம் பைனலுக்கு முன்னேறியவர்கள்.

சாதனையை சமன் செய்வார்

சாதனையை சமன் செய்வார்

இதில் இருந்து, டென்னிஸில் செரீனா புரிந்து வந்த ராஜாங்கம் தெளிவாக தெரியும். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவர், 24வது பட்டத்தை வென்று அதிக பட்டம் வென்றவர் என்ற சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதும் அந்த எதிர்பார்ப்பு உயிர்ப்புடன் உள்ளது. கடந்த, 2016ல் இருந்து, இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றதுடன், இரண்டின் பைனலுக்கு முன்னேறினார் செரீனா.

8 பைனலில் 7 பட்டம்

8 பைனலில் 7 பட்டம்

ஆஸ்திரேலிய ஓபனைப் பொருத்தவரை, 1998ல் முதல் முறையாக விளையாடத் துவங்கினார். கடந்த, 20 ஆண்டுகளில், எட்டு முறை பைனலுக்கு நுழைந்து ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2002, 2004, 2011ல் அவர் பங்கேற்கவில்லை. அதன்படி, 17 முறை ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்கியுள்ளார்.

ஆட்டத் திறனால் சாதித்தார்

ஆட்டத் திறனால் சாதித்தார்

பெடரர், நடால் போன்றோர் 30 வயதை தாண்டி விட்டார்கள், அவர்களால் சோபிக்க முடியுமா என்று பலர் கூறுகின்றனர். ஆனால், 36 வயதான செரீனா வில்லியம்ஸ் குறித்து இதுவரை அவ்வாறு பேசப்பட்டது கிடையாது. அது அவருடைய ஆட்டத் திறனுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாகும்.

Story first published: Monday, January 15, 2018, 17:08 [IST]
Other articles published on Jan 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+