Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் பெடரரை வீழ்த்தி அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியனானார் ஜோகோவிச்!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிசின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், முன்னணி வீரர் ரோஜர் பெடரரை தோற்கடித்து மற்றொரு முன்னணி ஆட்டக்காரரான நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வந்தது. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடந்தது. இதில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான செர்பிய நாட்டின் ஜோகோவிச்சும், முன்னணி வீரரான ரோஜர் பெடரரும் சந்தித்தனர்.

Djokovic claims US Open title

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-5, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனார்.

ஜோகோவிச் இவ்வாண்டில் வென்ற 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே இந்த ஆண்டில் அவர் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக அவர் வெல்லும் 10வது கிராண் ஸ்லாம் பட்டம் இதுவாகும். 28 வயது ஜோகோவிச் கடந்த 2011ம் ஆண்டிலும் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியிலும், இதே ஜோடி மோதியது. அதிலும் பெடரர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 14, 2015, 8:53 [IST]
Other articles published on Sep 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+