Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்த மகளிர் சாம்பியன்.. கண்ணீர் விட்ட வீராங்கனை

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 21 வயதான போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.

இறுதிப் போட்டியில் 18 வயதான அமெரிக்க வீராங்கனை கோகோவை அவர் எதிர்கொண்டார். இந்த வெற்றியின் மூலம், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

French open tennis- Poland’s Iga swiatek clichéd her 2nd Grandslam Title

ஆஷ்லி பார்டி ஓய்வு பெற்றதன் மூலம், இகா ஸ்வியாடெக் நம்பர் 1 இடத்தை பிடித்தார். தோஹா, இந்தியன் வெல்ஸ், மியாமி, ஸ்டட்கர்ட், ரோம் மாஸ்டர்ஸ் ஆகிய தொடர்களில் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியை காட்டிய ஸ்வியாடெக் 6க்கு1, 6க்கு3 என்ற செட் கணக்கில் அமெரிக்கா வீராங்கனை கோகோவை வீழ்த்தினார். இதன் மூலம் ஸ்வியாடெக் 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். தோல்வியை தழுவிய 18 வயது வீராங்கனை கோகோ கண்ணீர் விட்டு அழ தொடங்கினார்.

French open tennis- Poland’s Iga swiatek clichéd her 2nd Grandslam Title

பின்னர் முகத்தை டவலால் மூடிக் கொண்டார். வெற்றி குறித்து பேசிய ஸ்வியாடெக் இறுதிப் போட்டியை மற்றொரு சாதாரண போட்டியை போல் தான் நினைத்து கொண்டு விளையாடினேன். நிச்சயம், இறுதிப் போட்டியில் விளையாடும் போது பதற்றம் இருக்கும். அதே போல் எதிரே விளையாடும் வீராங்கனைக்கும் பதற்றம் அச்சம் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது வெற்றியை ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு செலுத்துவதாகவும் ஸ்வியாடெக் கூறினார்.தோல்வி குறித்து பேசிய அமெரிக்க வீராங்கனை கோகோ இறுதிப் போட்டி வரை வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்தப் போட்டியை அனுபவமாக எடுத்து கொண்டு, பாடத்தை கற்று கொண்டு, மீண்டு வருவேன் என்று தெரிவித்தார்.

Story first published: Sunday, June 5, 2022, 13:08 [IST]
Other articles published on Jun 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+