Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை வெல்வது ஈஸிதான்... செரீனா வில்லியம்ஸ்

பெய்ஜிங்: உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், தான் ஒன்றும் வீழ்த்தவே முடியாத வீராங்கனை அல்ல என்றும் என்னையும் வெல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் கோர்ட்டில் ஒரு புயலைப் போல புகுந்து விளையாடுபவர் செரீனா வில்லியம்ஸ்.

இவரது முரட்டு ஆட்டம் டென்னிஸ் தெரியாதவர்களைக் கூட டென்னிஸ் மீது காதல் கொள்ள வைக்கும். அப்sபடி ஒரு அதிரடி.. நேர்த்தி.. இவரது ஆட்டத்தி்ல் இருக்கும்.

இந்த நிலையில் தன்னை வெல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை, யார் வேண்டுமானாலும் என்னை வீழ்த்தலாம் என்று செரீனா பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.

ஒரே வருடத்தில் 10வது பட்டம்

ஒரே வருடத்தில் 10வது பட்டம்

ஞாயிற்றுக்கிழமை சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் செரீனா. இது அவர் இந்த ஆண்டு வெல்லும் 10வது பட்டமாகும்.

கடந்த மாதம் முதல் நம்பர் ஒன்

கடந்த மாதம் முதல் நம்பர் ஒன்

கடந்த மாதம்தான் அவர் முதல் நிலை வீராங்கனையாக ரேங்கிங்கில் உயர்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.

90 லட்சம் டாலர் சம்பாத்தியம்

90 லட்சம் டாலர் சம்பாத்தியம்

மேலும், ஒரே சீசனில் 90 லட்சம் டாலருக்கு மேல் சம்பாதித்து அதிலும் ஒரு சாதனை படைத்துள்ளார். ஒரே சீசனில் அதிக அளவில் சம்பாதித்த முதல் பெண் வீராங்கனை இவர்தான்.

என்னை ஈஸியாக ஜெயிக்கலாம்

என்னை ஈஸியாக ஜெயிக்கலாம்

சீன ஓபன் வெற்றிக்குப் பின்னர் அவர் கூறுகையில், எல்லோருமே தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்க முடியாது. தோல்விக்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். நானும் அப்படித்தான். நான் ஒன்றும் தோற்கடிக்கவே முடியாதவள் அல்ல.. என்னையும் வெல்லலாம்...இதை நான் எப்போதுமே மனதில் வைத்துள்ளேன்.

நான் ஒஸ்த்தி அல்ல..

நான் ஒஸ்த்தி அல்ல..

எல்லோருமே சமம்தான். எல்லோருமே பலம் வாய்ந்தவர்கள்தான். யாருமே யாரையும் விட உயர்ந்தவர்கள் அல்ல. நானும் அப்படித்தான். எனது ஆட்டத்தை விளையாடுகிறேன். வெல்கிறேன். மற்றவர்களும் அதேபோலத்தான் வெற்றியைக் குறி வைத்து விளையாடுகிறார்கள். சிலர் தோற்கிறார்கள், சிலர் வெல்கிறார்கள்.

கடுமையாக உழைக்கிறேன்

கடுமையாக உழைக்கிறேன்

எனக்கு 32 வயதாகிறது. இருந்தாலும் நான் கடுமையாக உழைக்கிறேன். அனைத்தையும் சரியாக செய்கிறேன். பலன் கிடைக்கிறது, மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் சிறந்தவளாக இருக்க முயற்சிக்கிறேன். நாளையே இந்த இடம் வேறு ஒருவருக்குச் சொந்தமாகலாம்.. யார் கண்டது என்றார் செரீனா.

இதுவரை 56 பட்டம்

இதுவரை 56 பட்டம்

செரீனா வில்லியம்ஸ் இதுவரை மொத்தம் 56 பட்டங்களை வென்றுள்ளார். இதில் 17 பட்டங்கள் முக்கியமானவை, பெரிய போட்டிகளாகும்.

எல்லா கிராண்ட்ஸ்லாமும் செரீனாவுக்கே..!

எல்லா கிராண்ட்ஸ்லாமும் செரீனாவுக்கே..!

அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 5வது டென்னிஸ் வீராங்கனை செரீனா என்பது குறிப்பிடத்தக்கது.

செரீனா உண்மையிலேயே 'போல்ட் அன்ட் ப்யூட்டிஃபுல்'தான்.. உருவத்தில் மட்டுமல்ல, ஆட்டத் திறனிலும்!

Story first published: Wednesday, October 9, 2013, 11:47 [IST]
Other articles published on Oct 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+