Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஜர் பெடரர் நம்பர் 1 பேட்ஸ்மேன் - ஐசிசி அறிவிப்பு... ட்விட்டரில் ரணகளம் செய்யும் #wimbledon #ICC

விம்பிள்டன்: விறுவிறுப்பாக நடந்து வரும் விம்பிள்டன் தொடரில், டென்னிஸ் உலகின் சாதனை வீரரான ரோஜர் பெடரர் நான்காவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

நான்காவது சுற்று ஆட்டத்தின் போது, தவறாக செர்வ் (serve) செய்யப்பட்ட பந்தை தடுக்கும் நோக்கில், கிரிக்கெட்டில் ஆடும் தடுப்பு ஆட்டம் (Forward Defence Shot) போல அதை தடுத்தார்.

யார் அதை கவனித்தார்களோ இல்லையோ, விம்பிள்டன் நிர்வாகம் கவனித்து விட்டது. இதையடுத்து அது செய்ததுதான் அதகளம்.

பெடரருக்கு ரேங்க் போட்ட ஐசிசி

தன் ட்விட்டர் பக்கத்தில், அந்த வீடியோவை வெளியிட்டு, ஐசிசியிடம் பெடரரின் கிரிக்கெட் திறமைக்கு மதிப்பெண் வழங்குமாறு கூறியது.

அதுக்கு மேல ஐசிசி

இதை கவனித்த ஐசிசி, ஒரு படி மேலே போய், ஒரு போலியான கிரிக்கெட் பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியல் படத்தை வெளியிட்டு, அதில் பெடரர் முதல் ரேங்க் பேட்ஸ்மேன் என்பதை போல காட்டியிருந்தது.

அத்தோடு நிற்கவில்லை

அதோடு நிற்காமல், அடுத்த ட்வீட்டில் இரண்டு ஸ்பைடர்மேன்கள் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு சந்திக்கும் ஒரு கார்டூன் காட்சியில் ஸ்பைடர்மேன் முகங்களை பெடரர் மற்றும் சச்சின் முகங்களாக மாற்றி வைத்து ரகளை செய்தது, ஐசிசி. கிரிக்கெட்டில் சிறந்த சச்சினும், டென்னிஸில் சிறந்த பெடரரும் சந்தித்துக் கொள்வது போன்ற ஒரு சித்தரிப்பாக இருந்தது.

குறுக்கே வந்த சச்சின்

இதைக் கண்ட சச்சின், தன் ட்வீட்டில் "எப்போதும் போல, சிறந்த கை-கண் ஒருங்கிணைப்பு. நீங்கள் ஒன்பதாவது விம்பிள்டன் பட்டம் வென்ற பின் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் குறித்த குறிப்புகளை நாம் பரிமாறிக் கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்ல தோஸ்த்துகள்

நல்ல தோஸ்த்துகள்

2011 விம்பிள்டன் தொடரின் போது, சச்சினும், பெடரரும் சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பை குறித்து சச்சின் கூறும் போது, "ரோஜர் பெடரருடன், ஒரு மணி நேரம் செலவழித்தேன். என்ன ஒரு அடக்கமான மனிதர்! அவர் கிரிக்கெட் பற்றியும் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

விறுவிறுப்பான விம்பிள்டன்

விறுவிறுப்பான விம்பிள்டன்

தற்போது, பெடரர் விம்பிள்டனில் காலிறுதிச் சுற்றில் ஆட உள்ளார். மற்றொரு புறம் முன்னணி வீரர்களான ஜோகோவிக் மற்றும் நடால் ஆகியோரும் விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளனர். இதனால், விம்பிள்டன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Tuesday, July 10, 2018, 20:17 [IST]
Other articles published on Jul 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+