For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய அணிகள்

காமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிள்ர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா வென்றது.

டெல்லி: காமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா இரண்டு லீக் ஆட்டங்களில் வென்றதன் மூலம், காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. பளுதூக்குதலில் இதுவரை இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன. டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்திய அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளதால், பதக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Indian table tennis teams in the quarters of CWG

ஆடவர் பிரிவில் இந்தியா தனது முதல் சுற்று ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் டிரினிடாட் அண்ட் டொபாகோ அணியை வென்றது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது. இரண்டு வெற்றிகளைப் பெற்றதால், இந்திய ஆடவர் அணி கால் இறுதிக்கு நேரடியாக முன்னேறி உள்ளது.

மகளிர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியா 3-0 என இலங்கையை வீழ்த்தியது பின்னர் நடந்த இரண்டாவது லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் காலிறுதிக்கு மகளிர் அணியும் முன்னேறியது. கால் இறுதியில் மலேசியாவை சந்திக்கிறது இந்திய அணி.

Story first published: Friday, April 6, 2018, 19:40 [IST]
Other articles published on Apr 6, 2018
English summary
indian table tennis teams wins their league matches and enters the quarter finals of commonwealth games.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+