For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓடுங்க... அந்த கொடிய மிருகம் நம்மை தாக்க துரத்துது... தொடரை ரத்து செய்துவிட்டு ஓடுங்க

கலிபோர்னியா : கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் உலக அளவில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு அல்லது ஒத்திவைக்கப்பட்டு வருகின்றனர்.

Indian Wells Tennis Tournament cancelled over concerns about coronavirus outbreak

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவின் முக்கிய டென்னிஸ் போட்டியான இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரை அந்நாடு ரத்து செய்துள்ளது.

சீனாவில் துவங்கி சர்வதேச நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சர்வதேச அளவில் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி தற்போது 25 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சில சர்வதேச போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் உள் விளையாட்டு அரங்குகளில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் ஐபிஎல் தொடர்களும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அச்சுறுத்திவரும் கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பீதியால் அமெரிக்காவில் நடத்தப்பட்டுவரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் துவங்க திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடரின் ஏடிபி மற்றும் டபள்யூடிஏ போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு இணையாக கருதப்படும் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலில் பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்த தொடரை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கலிபோர்னியாவின் ரிவர்சைட் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டதையடுத்து தற்போது இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Recommended Video

IPL season 12 may be halted | கொரோனா தாக்குதல் எதிரொலி... ஐபிஎல் தள்ளி வைக்க வாய்ப்பு ?

மேலும் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த நிர்வாகிகள், உள்ளூர் மக்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் தற்போது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Story first published: Monday, March 9, 2020, 15:23 [IST]
Other articles published on Mar 9, 2020
English summary
Indian Wells Tennis Tournament Cancelled Over Worldwide Coronavirus Outbreak
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+