ஆட்டத்தில் செரீனா ஈஸ்வரியாக இருக்கலாம்... ஆனால் வசூலில் ஷரபோவாதான் கோடீஸ்வரி!
விம்பிள்டன்: அதிரடியாக ஆடி வீழ்த்துவதில் செரீனா வில்லியம்ஸ் பெரியவராக இருக்கலாம். ஆனால் சம்பாத்தியத்தில் இன்னும் மரியா ஷரபோவாதான் அவரை விட பெஸ்ட்டாக இருக்கிறார்.
செரீனா அதிரடியாக ஆடி வந்தாலும், அதிரடியாக சம்பாத்தியம் செய்வதில் மரியாதான் முன்னணியில் இருக்கிறார்.
செரீனாவை விட அதிக அளவில் சம்பாதிப்பவர் மரியாதான். விளம்பரம் மூலம் மட்டுமே இவர் மிகப் பெரிய அளவில் பணம் ஈட்டி வருகிறார்.

போர்ப்ஸ் பட்டியல்
2014ம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலில் மரியா ஷரபோவா 24.4 மில்லியன் டாலர் சம்பாத்தியம் ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. செரீனாவின் வருவாய் 22 மில்லியன் டாலராகும்.

எல்லாம் விளம்பரம்தான்
தனது வருவாயில் 22 மில்லியன் டாலரை விளம்பரம் மூலமே ஈட்டியிருந்தார் மரியா. பரிசுத் தொகையாக வந்தவை வெறும் 2. மில்லியன் டாலர்தான்.

பரிசுகளைக் குவிக்கும் செரீனா
அதேசமயம், பரிசுகள் மூலம்தான் செரீனா அதிக அளவில் வருவாய் ஈட்டுகிறார். அதாவது 11 மில்லின் டாலரை அவர் வருவாயாக பரிசுகள் மூலம் பெற்றிருந்தார். விளம்பரம் மூலம் கிடைத்த வருவாய் 11 மில்லியன் டாலராகும்.

அவர் அடிக்கிறார்.. இவர் நடிக்கிறார்
செரீனா அடித்து ஆடி சம்பாதிக்கிறார் என்றால், மரியா, மேக்கப் போட்டு நடித்து சம்பாதித்துக் குவிக்கிறார் என்று சொல்லலாம்.

கலர் காரணமா
செரீனா வில்லியம்ஸ் இத்தனை பிரபலமாக இருந்தும், முன்னணியில் இருந்தும் அவரை விட மரியா அதிகம் சம்பாதிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் "கலர்" பார்த்து விளம்பரங்களுக்கு நிறுவனங்கள் ஆட்களைப் புக் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

மாடல்தான் தேவை
விளம்பர நிறுவனங்களுக்கு முன்னணி வீராங்கனை என்பதை மாடல் அழகிகள்தான் தேவைப்படுகிறார்கள். எனவேதான் மாடல் அழகிகளைப் போல இருக்கும் மரியாவை மொய்த்து எடுக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications