Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் பைனலில் மீண்டும் கெர்பர்... செரீனாவும் வந்துவிட்டார்!

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் பைனலுக்கு முன்னேறினார் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர். இரண்டாவது முறையாக அவர் பைனலில் விளையாட உள்ளார். 2016ல் நடந்ததைப் போலவே இந்த முறையும் பைனலில் செரீனா வில்லியம்ஸை சந்திக்கிறார். மற்றொரு அரை இறுதியில் செரீனா அபாரமாக வென்றார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், லாட்வியாவின் ஜெலீனா ஓஸ்டாபென்கோ மோதினர்.

இந்த ஆட்டத்தில் 6-3, 6-3 என சுலபமாக வென்று பைனலுக்கு முன்னேறினார் கெர்பர், இரண்டாவது முறையாக விம்பிள்டன் பைனலில் விளையாடுகிறார் கெர்பர்.

2016ல் நடந்த பைனலில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சிடம் அவர் தோல்வி அடைந்தார். 2016ல் யுஎஸ் ஓபன் பட்டம் வென்ற பிறகு, கடந்த 21 மாதங்களில் மிகப் பெரிய வெற்றியை உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்த கெர்பர் சந்திக்கவில்லை.

பைனல் வாய்ப்பு

பைனல் வாய்ப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அரை இறுதி, பிரெஞ்ச் ஓபனில் கால் இறுதி வரை முன்னேறினார். தற்போது விம்பிள்டனில் பைனலுக்கு நுழைந்துள்ளார்.

பைனலில் செரீனா

பைனலில் செரீனா

மகளிர் பிரிவில் நடந்த மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஜூலியா கோர்ஜஸை சந்தித்தார். 6-2, 6-4 என வென்று 10வது முறையாக விம்பிள்டன் பைனலுக்கு நுழைந்தார்.

மீண்டும் 2016

மீண்டும் 2016

2016ல் விம்பிள்டன் பைனலிலும் செரீனா வில்லியம்ஸ், கெர்பர் சந்தித்தனர். அதில் செரீனா வென்றார். கர்ப்பமடைந்ததால் கடந்த ஆண்டு செரீனா விளையாடவில்லை. இதுவரை 7 முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார் செரீனா.

ஆடவர் பிரிவு அரை இறுதி

ஆடவர் பிரிவு அரை இறுதி

இதனிடையில் ஆடவர் அரை இறுதியில் ஸ்பெயினின் ரபேல் நடால்,

செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மோத உள்ளனர். மற்றொரு அரை இறுதியில், ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி அளித்த தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சந்திக்க உள்ளனர்.

Story first published: Thursday, July 12, 2018, 20:50 [IST]
Other articles published on Jul 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+